Blogs

Tuesday, 26 November 2019 11:57 AM , by: Anitha Jegadeesan

சூரியகாந்தி எண்ணெய் தேவை அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் விவசாயிகள் அனைவரும் சூரியகாந்தி பயிரிட முன் வர வேண்டும் என வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் சூரியகாந்தி பயிரிடுவதற்கான ஏற்ற சூழ்நிலை நிலவுகிறது.

மத்திய அரசு தற்போது எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் நிறுத்துவதற்கான நடவடிக்கையை  மேற் கொண்டு வருகிறது. எனவே உள்நாட்டு எண்ணெய் வித்துகளுக்கான சூரியகாந்தி விதைக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது. குறுகிய கால பயிராகவும், குறைந்த சாகுபடிச் செலவு மற்றும்  குறைவான பாசன வசதியே போதுமானது.

இந்தியா முழுவதும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எனவே விவசாயிகள் லாபம் தரும் சூரியகாந்தி பணப் பயிரை பயிரிட்டு பயன்பெறுமாறு வியாபாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் அதிக விலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)