Blogs

Friday, 29 November 2019 04:32 PM , by: Anitha Jegadeesan

சின்ன வெங்காயத்தின் விதை விலை அதிகரிப்பால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் , நத்தம், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, வேடசந்துார், பழநி போன்ற பகுதிகளில் சுமார் 1,200 எக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கிருந்து பிற மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.

தற்போது சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகம்  இல்லாததால் தினமும் விலை அதிகரித்து வருகிறது. கடந்த வாரங்களில் கிலோ ரூ.60க்கு விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது ரூ.85க்கு விற்பனையாகி வருகிறது. சந்தைகளில் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் சின்னவெங்காய நடவில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர்.

சின்ன வெங்காய விதையின் தேவை அதிகரித்து உள்ளதால் அதன் விலையும் விண்ணை நோக்கி செல்கிறது.  கடந்த வாரம் வரை கிலோ ரூ.150க்கு விற்பனையான விதை தற்போது கிலோ ரூ.250க்கு விற்பனையாகிறது. மேலும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய அதிக செலவு ஆகுமென்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)