சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 16 March, 2022 4:38 PM IST
Fixed Deposit Scheme -New Terms
Fixed Deposit Scheme -New Terms

கடந்த சில நாட்களாகவே பல்வேறு வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கான வட்டியை உயர்த்தி வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு கவலை தரும் விதமாக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கான விதிமுறையை மத்திய ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது. இது டெபாசிட்தாரர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

புதிய விதிமுறைகள் (New Terms)

புதிய விதிமுறையின்படி, ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் அதன் முதிர்வுக் காலம் முடிந்ததும் அந்தத் தொகையை கிளைம் செய்து விட வேண்டும். அவ்வாறு கிளைம் செய்யப்படாமல் இருக்கும் தொகைக்கு இனி சேமிப்பு கணக்கு திட்டத்துக்கான வட்டியே வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை கூறுகிறது.

வட்டி விகிதத்தைப் பொறுத்தவரையில், பல்வேறு வங்கிகளில் 5 முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்வு கொண்ட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு 5 சதவீத வட்டி கிடைக்கிறது. ஆனால் சேமிப்பு கணக்குகளுக்கு 3 முதல் 4 சதவீத வட்டியே வழங்கப்படுகிறது. இதன்படி பார்த்தால், புதிய விதிமுறையில் வாடிக்கையாளர்களுக்கு குறைவான வட்டியே கிடைக்கும்.

வட்டி குறைப்பு (Interest Reduced)

தற்போது அமலுக்கு வந்துள்ள இந்த விதிமுறை அனைத்து வர்த்தக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் உள்ளூர் பிராந்திய வங்கிகளுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், கனரா பேங்க், கோடாக் மகிந்திரா பேங்க் உள்ளிட்ட வங்கிகள் வட்டி விகிதத்தை சமீபத்தில் உயர்த்தியிருந்தன. இந்நிலையில் தற்போது வட்டி குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க

வங்கி ஊழியர்கள் இந்த 2 நாட்களில் வேலை நிறுத்தம்!

பென்சன் வாங்குவோருக்கு நல்ல செய்தி: புதிய விதிமுறைகள் அறிமுகம்!

English Summary: Fixed Deposit Scheme: Reserve Bank Introduces New Term!
Published on: 16 March 2022, 04:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now