இயந்திரமயமாகிவிட்ட இன்றைய உலகில் சிறகடித்துப் பறக்க யாருக்குதான் இங்கு ஆசை இல்லை. அப்படிப் பறக்க வேண்டும் என ஆசைப்படுபவரா நீங்கள்? உங்கள் எண்ணத்தை நிறைவேற்ற வருகிறது பறக்கும் பைக்.
முதல் பறக்கும் பைக்
உலகின் முதல் பறக்கும் பைக்கை அமெரிக்க வாகன கண்காட்சியில் ஜப்பானிய நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏர்வின்ஸ் உருவாக்கியுள்ள இந்த பறக்கும் பைக் டெட்ராய்ட் பகுதியில் நடக்கும் வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ட்ரோன் போன்றது
ட்ரோன் போன்ற வடிவமைப்பிலான பறக்கும் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக் தொடர்ந்து 40 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது. மணிக்கு 99 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும்.
விலை
ஜப்பானில் இந்த பைக் விற்பனை துவங்கி விட்டதாகவும், இப்பைக்கின் சிறிய அளவை 2023ல் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாகவும், இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.6.20 கோடி எனவும் ஏர்வின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இளசுகள்
லட்சம் ரூபாய் பைக் விற்கப்பட்டாலும், குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல நினைப்பவர்கள், விலையைக் கருதாமல், வாங்கிப் பயன்படுத்துகின்றனர். ஆனால் டிராஃபிக் இல்லாமல், நிமிடத்தில் பறக்க வேண்டுமானால், இந்த பைக்கை இப்போதே முன்பதிவு செய்ய கொள்ளவேண்டும்.
மேலும் படிக்க...