பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அதன் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தியை வழங்க உள்ளது. விரைவில் ஊழியர்கள் தங்கள் கணக்கில் 40 ஆயிரம் ரூபாயைப் பெறக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்கள் கணக்கில் 5 லட்சம் ரூபாய் கொண்டுள்ள பிஎஃப் கணக்குதாரர்களுக்கு அவர்களது கணக்கில் ரூ.40 ஆயிரம் வட்டி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஃப் வட்டி (PF Interest)
கணக்கில் பணம் வந்ததா இல்லையா என்பது பற்றிய தகவல்களை வீட்டில் அமர்ந்தபடியே சந்தாதாரர்கள் தெரிந்துகொள்ளலாம்.
நாட்டின் பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் சொந்த பிஎஃப் கணக்கை வைத்திருக்கிறார்கள். அதில் அவர்கள் ஒவ்வொரு மாதமும் பங்களிக்கிறார்கள். உங்கள் சம்பளத்தில் இருந்து பிஎஃப் தொகை கழிக்கப்பட்டால், விரைவில் ஒரு பெரிய தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போது நாடு முழுவதும் 6 கோடி ஊழியர்களின் பிஎஃப் கணக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நன்மையை யார் பெறுவார்கள்
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) மிக விரைவில் PF வட்டி பணத்தை ஊழியர்களின் கணக்கிற்கு மாற்றும். பிஎஃப் கணக்கில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்ட ஊழியர்கள், 40 ஆயிரம் ரூபாயை வட்டியாகப் பெறலாம். வட்டி தொகை விரைவில் பிஎஃப் கணக்கிற்கு மாற்றப்படும் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க
ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை மேலும் உயர்த்தும் கோடக் மஹிந்திரா..!
PF வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதம் உயர்வு: எவ்வளவு தெரியுமா?