Blogs

Monday, 16 December 2019 01:02 PM , by: Anitha Jegadeesan

இன்று எல்லா விவசாயிகளும் உபத் தொழிலாக ஏதேனும் ஒரு தொழில் ஈடுபட்டு வருகிறார்கள்.கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு என குறைந்த இடத்தில் லாபம் ஈட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் விவசாயம் சார்ந்த தொழிலாக தேனீ வளர்ப்பு வளர்ந்து வருகிறது.தேன் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு முக்கிய தொழிலாக மாறி வருகிறது. தேனீ வளர்ப்பில் இருந்து தேன் மற்றும் மெழுகு போன்றவை பெறப் படுகின்றன.

தேனீ வளர்ப்பின் பயன்கள்

  • தோட்டத்தில் தேனீ பெட்டிகளை நிறுவும்போது மகரந்த சேர்க்கை மூலமாக மகசூல் அதிகரிக்கிறது.
  • சுத்தமான ஒரிஜினல் தேன் எடுத்து விற்பனை செய்யலாம்.
  • கையளவு நிலம் சொந்தமாக இல்லாதவர்கள்கூட தேனீ வளர்ப்பு மூலம் வருமானம் ஈட்ட முடியும்.
  • அதிக முதலீடு இல்லாத நிரந்தர வருமானம் தரும் தொழில்.

மதுரம் இயற்கை தேன் பண்ணை வரும் ஞாயிறு  22/12/19 அன்று திருச்சி அருகே உள்ள தச்சங்குறிச்சி- யில் அமைந்துள்ள ஜோஸ் ஆர்கானிக் பண்ணையில் தேனீ வளர்ப்பு  இலவச பயிற்சி காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.

பயிற்சியின் சிறப்பம்சங்கள்

  • தேனீ வளர்ப்பின் நன்மைகள்,
  • தேனீயை பெட்டிகளை பராமரிக்கும் முறை,
  • தேனின் மருத்துவ குணங்கள்,
  • தேன் எடுக்கும் முறை,
  • தேனை சந்தைப்படுத்துதல்

என அனைத்தும் பயிற்று விக்க படும். கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் 7708253626 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்தல் அவசியமாகும். பயிற்சி முடிந்த உடன் தேனீ பெட்டி தேவைபடுபவர்கள் முன்தாக ஆர்டர் செய்யவும்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)