ரயிலில் பயணம் செய்வோருக்கு ஒரு இனிப்பான செய்தியை ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ளது. இதன்படி ரயில் தாமதமாக வந்தால் உங்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். இதனை ஐஆர்சிடிசி இலவச உணவு வழங்கும்.
உங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் ரயில் தாமதத்தால் நீங்கள் சிக்கலைச் சந்திக்க நேரிடும். இப்படி ரயில் தாமதமாக வந்தால் ஒரு பயணியாக உங்களுக்கும் சில உரிமைகள் இருக்கிறது. அத்தகைய உரிமையைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
விதிகள்
இந்திய ரயில்வேவின் விதிகளின்படி, ரயில் தாமதமாக வரும்போது, ஐஆர்சிடிசியின் கேட்டரிங் கொள்கையின்படி பயணிகளுக்குக் காலை உணவும் சிற்றுண்டியும் வழங்கப்பட வேண்டும். அதன்படி ரயில் குறித்த நேரத்தைத் தாண்டி இயங்கினால், IRCTC உங்களுக்கு உணவு மற்றும் ஒரு குளிர்பானத்தை வழங்குகிறது. இந்த உணவானது உங்களுக்கு IRCTC ஆல் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
உணவுகள்
IRCTC கொள்கையின்படி, ரயில் தாமதமாகும் பட்சத்தில் காலை உணவில் டீ அல்லது காபி மற்றும் இரண்டு பிஸ்கட்களும், மாலை சிற்றுண்டியில் டீ அல்லது காபி மற்றும் நான்கு பிரட் ஸ்லைஸ்கள், ஒரு வெண்ணெய் சிபாட்டில் வழங்கப்படுகிறது.
ஐ.ஆர்.சி.டி.சி.யால் மதியம் அல்லது இரவு உணவிற்கு அரிசி, பருப்பு மற்றும் ஊறுகாய் பாக்கெட்டுகள் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது, அல்லது 7 பூரிகள், கலவை வெஜ்/ஆலு பாஜி, ஒரு பாக்கெட் ஊறுகாய் மற்றும் தலா ஒரு பாக்கெட் உப்பு மற்றும் மிளகு போன்றவையும் வழங்கப்படுகிறது.
எப்போது கிடைக்கும்
IRCTC விதிகளின்படி, பயணிகளுக்கு ரயில் 30 நிமிடம் தாமதமாக வந்தால் உணவு வசதி கிடைக்காது. கேட்டரிங் கொள்கையின் கீழ், ரயில் இரண்டு மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வந்தால், சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த வசதி வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க...