விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் 21ம் தேதி கறவை மாடு வளர்பது குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாமில் கறவை மாடு இனங்கள் வளர்ப்பு, தீவன மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை, கொட்டகை அமைத்தல் மற்றும் நோய்த் தடுப்பு போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் கொடுக்கப்பட உள்ளன. இப்பயிற்சியில் பங்கு கொள்ள விரும்பும் விவசாயிகள் அலுவலக வேலை நாட்களில் மையத்தை தொடர்பு கொண்டு நேரிலோ அல்லது 93853 07022 எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து கலந்து கொள்ளலாம் என, கால்நடை மருத்துவ பல்கலைக்கழக தலைவர் ஜோதிலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Thanks: Agri dr
Anitha Jegadeesan
Krishi Jagran