Blogs

Thursday, 02 June 2022 01:07 PM , by: Elavarse Sivakumar

ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்கியா திட்டத்தின் கீழ், குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சேவை வழங்கப்பட உள்ளது.

உலக நாடுகளைப் பொருத்தவரை, பொது மருத்துவம் மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வி இன்னும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. தனியாருக்கு தாரை வார்க்கப்படவில்லை. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை என்றக் குற்றச்சாட்டு உள்ளது.

அரசின் திட்டம்

அந்தக் குற்றாட்டைப் போக்கும் வகையில், எல்லா குடிமக்களுக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக 2018 செப்டம்பர் மாதம் ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா (Ayushman Bharat - Pradhan Mantri Jan Aarogya Yojana) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

ரூ.5 லட்சம்

இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. தற்போது ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்கியா திட்டம் மேற்கு வங்கம், டெல்லி, ஒடிசா ஆகிய மாநிலங்களை தவிர பிற எல்லா மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ உதவி

இது உலகின் மிகப்பெரிய அரசு நிதியில் இயங்கும் மருத்துவ உதவி திட்டமாகும்.

சிறப்பு அம்சங்கள்

  • இத்திட்டத்தின் பலன்களை நாடு முழுவதும் மாற்றிக்கொள்ளலாம்.

  • குடும்பத்தின் அளவு, வயது, பாலினம் ஆகிய அடிப்படையில் எந்த வரம்புகளும் இல்லை.

  • மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு (inpatients) மட்டுமே ஆயுஷ்மான் பாரத் பிரதார் ஜன் ஆரோக்கியா திட்டத்தின் சலுகைகள் கிடைக்கும்.

    புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய்கள் உள்பட 26 பிரிவுகளில் 1669 மருத்துவ முறைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற முடியும்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் இத்திட்டத்தின் சலுகைகள் வழங்கப்படுகிறது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை பிரீமியத் தொகை பிஎம் கேர்ஸ் திட்டத்தில் இருந்து செலுத்தப்படும்.

மேலும் படிக்க...

ஐஸ் வாட்டர் Vs மண்பானைத் தண்ணீர், எதில் பக்கவிளைவுகள்?

ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)