மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 January, 2020 12:45 PM IST

கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், வட்டார வேளாண்துறை இணைந்து வழங்கும்  இலவச கண்டுணர்வு சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். இவற்றை கரூர் கால்நடை பயிற்சி மையமும்,  வட்டார வேளாண்துறையும் இணைந்து அட்மா திட்டத்தின் கீழ் 20 விவசாயிகளை அழைத்து செல்ல உள்ளது. எனவே கரூர் மாவட்டதை சேர்ந்த,  60 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலாவிற்காக கர்நாடக மாநிலத்திற்கு அழைத்து செல்கின்றனர். பெங்களுரில் உள்ள தேசிய பால் வள ஆராய்ச்சி நிலையம்,  ஆடுகொடியில் அமைந்துள்ள தேசிய கால்நடை  ஊட்டசத்தியில் ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி, ஹெப்பால் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப் படுவர்.

கண்டுணர்வு சுற்றுலாவின் சிறப்பம்சங்கள்  

இதில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு பின்வரும் தொழில்நுட்பங்கள் குறித்த விரிவான பயிற்சி அளிக்கப் பட உள்ளது. 

  • சுத்தமான மற்றும் தரமான பால் உற்பத்தி முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள்
  • பாலில் உள்ள முக்கிய மூலக்கூறுகளான கொழுப்புச் சத்து மற்றும் இதர திட பொருள்களின் அளவை அதிகரித்தல்
  • கலப்படம் மற்றும் பாலின் தரத்தை அறிவது
  • மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களான பால்கோவா, நறுமண பால் மற்றும் மோர், பன்னிர், வெண்ணெய், நெய் போன்ற பொருட்கள் தயாரித்தல்         

கல்வி சுற்றுலா செல்லும் விவசாயிகளுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி செய்து தரப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் நேரிலோ அல்லது கடிதம் மூலமோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு

தொலைபேசி  04324 294335,

அலைபேசி 73390 57073

மின்னஞ்சல் karurvutrc@tanuvas.org.in

கல்வி சுற்றுலா - 17/02/20 - 21/02/20

விண்ணப்பிக்க கடைசி நாள் - 22/01/20

English Summary: Free Training and Tour for Cattle Farmers: Quality milk production and value-added products
Published on: 09 January 2020, 12:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now