இயற்கை முறையில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றிற்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் இதற்கான சந்தை வாய்ப்பு சாதகமாக இருப்பதால் பலருக்கும் பயன்படும் விதத்தில் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம், வருகின்ற 20ம் தேதி இயற்கை காய்கறிகள் சாகுபடி பயிற்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
பயிற்சியின் சிறப்பம்சம்
- இயற்கை முறையில் காய்கறிகளை சாகுபடி செய்வது மற்றும் அதன் முக்கியத்துவம்
- உயிர் உரங்களின் பயன்பாடு மற்றும் செயல்படும் விதம்
- இயற்கை வழியில் நோய் மேலாண்மை மற்றும் பூச்சி விரட்டி கரைசல்கள்தயாரித்தல்,
- இயற்கை முறையில் தாவர வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுத்துதல்
- அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள்
போன்றவை குறித்து விரிவான செயல் விளக்கத்துடன் பயிற்சிகள் கொடுக்கப்பட உள்ளன.
வேளாண் அறிவியல் மையத் தலைவர் என்.அகிலா வெளியிட்ட செய்திக் குறிப்பில், இயற்கை முறையில் காய்கறிகள் சாகுபடி குறித்த, ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் ஆர்வமுள்ள விவசாயிகள், தொழில்முனைவோர், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் சுயதொழில் செய்ய விரும்புவோர் என அனைவரும் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவா்கள் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மை அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ தொடர்புக் கொண்டு தங்களது பெயரை 19ம் தேதி காலை 9.30 மணிக்குள் கண்டிப்பாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி 20ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04286-266345, 266650 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.