இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 3 December, 2020 5:26 PM IST

கூகுள் பே, போன்பே போன்ற மொபைல் ஆப்கள் மூலமாகப் பணம் அனுப்பினால் வரும் ஜனவரி மாதத்திலிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்திய தேசிய கொடுப்பளவு கழகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்குப் பிறகு பல்வேறு இ-சேவைகள் தொடங்கப்பட்டுவிட்டன. நகர்புற மக்கள் பெரும்பாலும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். பெட்டிகடை முதல் வங்கிப் பரிவத்தனை வரை கூகுள் பே, போன்பே, பேடிஎம், அந்தந்த வங்கிகளின் ஆப்கள் மூலமே அதிகளவில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.

இனி கூடுதல் கட்டணம்?

இந்நிலையில், மூன்றாம் தரப்பு மொபைல் ஆப் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் யுபிஐ சேவைக்கு ஜனவரி 1 முதல் கூடுதல் கட்டணம் வசூலிக்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of Indiaமுடிவு செய்துள்ளது. இந்த நடைமுறையானது வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் Google pay, phonepe வழியாக மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை 30% Cap கட்டணம் விதிக்கப்படும். அதாவது 3 மாதங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பணப்பரிவர்த்தனைகளின் மொத்த தொகையில் 30% கேப் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும்.

கூகுள்பே, போன்பே-யின் ஆதிக்கம்

யுபிஐ-யில் கூகிள் பே மற்றும் ஃபோன்பே ஆகிய இரண்டு நிறுவனங்களின் ஆதிக்கம் மட்டுமே ஓங்கியிருக்கிறது. சமீபத்திய அறிக்கையின்படி, இரு நிறுவனங்களும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் 40 சதவிகிதம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Paytm மற்றும் MobiKwik ஆகியவை யுபிஐ பரிவர்த்தனைகளில் கிட்டத்தட்ட 20 சதவீதமாக பங்கினை கொண்டுள்ளது. அரசாங்கத்தின் BHIM UPI பயன்பாடு முதல் பல வங்கி பயன்பாடுகள் வரை மற்ற எல்லா பயன்பாடுகளும் எந்தப் பங்கையும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தப்பித்த Paytm

எனவே NPCI அமைப்பின் இந்த முடிவு கூகுள் பே, போன் பே போன்ற நிறுவனத்தின் பயனாளர்களை நிச்சயமாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் Paytm நிறுவனத்தைப் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.

மொபைல் ஆப்கள் மூலமாக பயனர்களுக்கு மலிவான சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில் NPCI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது மொதுமக்களுக்கு சிரமத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு பெரும்பாலான மக்கள் இதுபோன்ற மொபைல் ஆப் மூலமாகவே பணம் அனுப்பவும், கட்டணம் செலுத்துவதுமாக இருந்து வருகின்றனர். ஆனால் தற்போதைய அறிவிப்பு பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக, கூகுள் பே நிறுவனம் தனது பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன் பின்னர் இந்த நடவடிக்கை அமெரிக்காவில் மட்டுமே எனவும், இந்தியாவில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

3.5 லட்சம் பெண்களுக்கு வெள்ளாடு, நாட்டுக் கோழி வழங்கப்படும் - அமைச்சர் தகவல்!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., 162 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

English Summary: From January 1, UPI payment will be charged extra for Google pay and phonepe, read fullll details
Published on: 03 December 2020, 05:25 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now