பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 13 October, 2021 4:44 PM IST

வீட்டில் வளர்த்து வரும் செல்லப்பிராணி இறந்துவிட்டால் அதன் இறுதி சடங்கிற்காக அரசு ஊழியர்களுக்கு 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர் (Family member)

செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள், அவற்றின் மீது அலாதி அன்மையும், பாசத்தையும் கொட்டுவது வழக்கம். அதுமட்டுமல்ல, வாய்ப்பு கிடைத்தால் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்துக்கொள்ளும் அளவுக்குக் குடும்ப உறுப்பினராகவே நடத்துவர்.

செல்லப்பிராணிகள் (Pets)

நாய், பூனை, முயல் உள்ளிட்ட பல வகையான செல்லப்பிராணிகளை பாசமாக வளர்த்து வருகின்றனர். அதற்கு சரியான நேரங்களுக்கு அவற்றிற்கென தனி உணவு கொடுப்பது, மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லுவது என பராமரிப்புகளையும் பார்த்து பார்த்து செய்வது வழக்கம். ஏன் அவற்றுக்கு மருத்துவக் காப்பீடு செய்து கொள்வதுகூட வெளிநாடுகளில் உண்டு.

2 நாள் வரை விடுமுறை (Holiday up to 2 days)

இந்நிலையில், செல்லப்பிராணி பிரியர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் வகையில், ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது கொலம்பிய அரசு. அது என்ன தெரியுமா? உங்கள் மனதிற்கு நெருங்கியச் செல்லபிராணி இறந்துவிட்டால்,
அதன் இறுதி சடங்கிற்காக ஊழியர்களுக்கு 2 நாள் வரை விடுமுறை அளிக்க கொலம்பியா அரசு முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் மசோதா (Bill in Parliament)

இது தொடர்பான அறிவிப்பில், ஒரு வீட்டின் செல்லப்பிராணி இறந்தால், அதன் ஊழியர்களுக்கு இரண்டு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பைப் பெற அனுமதிக்க வேண்டும் என்றதொரு புதிய சட்ட மசோதாவை, கொலம்பிய லிபரல் கட்சியை சேர்ந்த அலெஜான்ட்ரோ கார்லோஸ் சாகான்  நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் செல்லப்பிராணிகள் ஒரு முக்கிய பாகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு உத்தரவு (Government order)

இதனை கவனத்தில் எடுத்துக் கொண்ட கொலம்பியா அரசு, ஊழியர்களது செல்லப்பிராணிகள் இறந்துவிட்டால் அதன் இறுதி சடங்கிற்காக 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் விலங்குகளின் நலனை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தை இல்லாத சிலர், செல்லப்பிராணிகளை குழந்தைகளாக நினைத்து பாவித்து வருவதால் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும் படிக்க...

பெண்களின் சேலைகளைத் துவைக்க வேண்டும் - 6 மாத நூதன தண்டனை!

காவலர்களுக்கு வார ஓய்வு - டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

English Summary: Funeral of a pet? - 2 days Holidays with pay!
Published on: 26 September 2021, 12:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now