பி.எப்., (PF) எனப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள பணத்தை, வேலையை இழந்தோரும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸால் (Corona Virus) நிதிப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள், பயனடையும் வகையில் இந்த புதிய வசதியை வருங்கால வைப்பு நிதியம் அமல்படுத்தியுள்ளது.
புதிய வசதி
கொரோனா வைரஸ் பரவலால், கடந்த ஆண்டு கடும் பொருளாதார பாதிப்பை சந்திக்க நேர்ந்தது. அப்போது, தங்கள் கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக எடுத்துக் கொள்ளும் வசதியை, வருங்கால வைப்பு நிதி அளித்தது. அவ்வாறு எடுக்கும் தொகையை திருப்பிச் செலுத்த தேவையில்லை. தற்போது கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை (Second Wave) தீவிரமாக உள்ளது. இந்த நிலையில், தங்கள் கணக்கில் உள்ள பணத்தில் இருந்து, அதிகபட்சம் 75 சதவீதம் எடுத்துக் கொள்ள, வருங்கால வைப்பு நிதியம் கடந்த மாதம் அனுமதி அளித்துள்ளது.
பென்ஷன்
வேலையை இழந்து கணக்கில் வரவு செலுத்தப்படாதவர்களும், தங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்கை முடிக்காமல் உள்ளதால் பென்ஷனுக்கான (Pension) தகுதியும் தொடரும் என, அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால், வேலையை இழந்தவர்கள் பெரிதும் பயனடைவார்கள். அதிலும், கொரோனா வைரஸ் பரவலில் உலகமே திண்டாடுகையில், இந்த அறிவிப்பு ஓரளவு மன நிம்மதியை அளிக்கும்.
மேலும் படிக்க
தொழில்துறையை மேம்படுத்த சிறப்பு கடன்! கொரோனா ஊரடங்கால் பாதித்தோருக்கு உதவி
பிரதமரை சந்தித்து 30 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்!