Blogs

Tuesday, 21 April 2020 12:50 PM , by: Anitha Jegadeesan

வேளாண் விரிவாக்க மையங்களில் 50 சதவீத மானியத்தில் விதைகள் வழங்கப்படுகின்றன. கோடை சாகுபடிக்கு நெல், சிறுதானியம், எண்ணெய் வித்துக்கள் வழங்கப்படுவதால் விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு வேளாண் மையம் தெரிவித்துள்ளது.

கோடை உழவு என்பது விவசாயிகளுக்கு பல வகைகளிலும் உறுதுணையாக உள்ளது. இக்காலங்களில் விவசாயிகள் குறைந்த நீரில் அதிக பலன் தரக்கூடிய நெல், சிறுதானியங்கள், எள், நிலக்கடலை, சூரியகாந்தி விதைகள் போன்றவற்றை 50 சதவீத மானியத்தில் விதையை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் நடமாடும் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலமாக விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்களை விநியோகம் செய்து வருகிறது. அவர்களின் பகுதிகளுக்கே சென்று விதை, நுண்ணுயிர் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் என அனைத்தையும் வழங்கி வேளாண் பணி தொய்வின்றி நடைபெறுவதை உறுதி செய்து வருகிறது.

விவசாயிகளின் நலனுக்காக, வேளாண் தொடர்பான சேவைகள் மற்றும் விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை அணுகும் படி கேட்டுக் கொண்டார்.

மதுரை கிழக்கு மற்றும் மேற்கு – 99760 37010

அலங்காநல்லூர் – 80722 45412

வாடிப்பட்டி – 97516 77767

மேலூர் – 96295 55530

கொட்டாம்பட்டி – 94439 11431

திருப்பரங்குன்றம் – 97896 63463

திருமங்கலம் – 80562 83334

கள்ளிக்குடி – 99948 74372

தே.கல்லுப்பட்டி – 99442 06655

செல்லம்பட்டி – 94862 26062

உசிலம்பட்டி – 94432 93406

சேடபட்டி – 94439 78218

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)