ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்தை கழிவுகள் இல்லாத கிராமமாக மாற்றும் முயற்சியில் ஒரு குவிண்டால் குப்பையை சேகரித்து தருபவர்களுக்கு அதற்கு ஈடான தங்கத்தை வழங்கி வருகிறார் வழக்கறிஞரான பரூக் அகமது கணாய்.
தொழில் முறை வழக்கறிஞரான 50 வயதான ஃபாரூக் அகமது கணாய், சடிவாரத்தின் சர்பஞ்ச் நீதிமன்றத்தில் தனது வேலையை முடித்த பிறகு, தினமும் இரண்டு மணி நேரம் கிராமத்தில் இருந்து கழிவுகள் மற்றும் குப்பைகளை சேகரித்து தூய்மையில் கவனம் செலுத்தி வருகிறார்.
2020 ஆம் ஆண்டு தனது கிராமத்தில் "திறந்தவெளிகள், பொது இடங்கள், நீர்நிலைகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சாலைகளில் பாலித்தீன், பயன்படுத்திய டயப்பர்கள், பிளாஸ்டிக், குப்பைகள் போன்றவை நிறைந்து இருந்ததை கண்டு தூய்மைப் பிரச்சாரத்தை கணாய் தொடங்கினார். அவர் கிராம மக்களிடையே கூறுகையில், இப்போதே தூய்மை பணியில் செயல்படுங்கள், இல்லையென்றால் நமது வருங்கால சந்ததியினர் நம்மை சபிப்பார்கள்” என்றார். மேலும் கணாய் தற்போது PRI-கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து தனது கிராமத்தில் குப்பைகளை அகற்ற தூய்மை இயக்கத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.
மேலும் குக்கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் குப்பைத் தொட்டி இருப்பதை கணாய் உறுதி செய்தார். தற்போது கிராமத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பாலித்தீன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கணாய் தனது பஞ்சாயத்தில் பாலிதீனுக்கு பதிலாக காகிதம் மற்றும் துணிப்பைகளை கொண்டு வர எண்ணுகிறார். தூய்மை இயக்கத்தில் உள்ளூர் மக்களின் பங்கேற்பினை அதிகரிக்கவும், அவர்களின் தூய்மை பணியினை ஊக்களிக்கமவும் கருதிய கனாய், இந்த ஆண்டு ஜனவரியில் குப்பைகளுக்கு ஈடாக தங்க நாணயங்களை மக்களுக்கு வழங்கும் புதுமையான யோசனையை கொண்டு வந்தார்.
இது குறித்து அவர் குறிப்பிடுகையில் "எனது கிராமத்தை குப்பை மற்றும் கழிவுகள் இல்லாததாக மாற்றுவதற்காக, எனது சொந்த பாக்கெட்டில் இருந்து குப்பைகளுக்கு ஈடாக தங்க நாணயங்களை மக்களுக்கு வழங்குகிறேன். இந்த உன்னத முயற்சிக்காக என் மனைவி எனக்கு 20 கிராம் தங்கம் வழங்கியுள்ளார். இந்த தங்கத்தை அணிவதை விட இன்றைய தலைமுறையினருக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க பயன்படுத்துவதே சிறந்தது என்று அவர் கூறினார்,” என கனாய் விவரித்தார்.
"இப்போது நான் ஒரு குவிண்டால் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீனுக்கு ஈடாக தங்க நாணயங்களை வழங்குகிறேன். இந்த முயற்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது” என்றார். குப்பை இல்லாத கிராமத்தை உருவாக்க வேண்டும் என்கிற கனவு நிறைவேறும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது. அதற்கு பொது இடங்கள், வீடுகள், திறந்தவெளிகள் போன்றவற்றில் இருந்து குப்பைகளை சேகரிக்கும் மக்கள் பாராட்டப்பட வேண்டும் மற்றும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதற்கிணங்க தான் இந்த தங்கம் வழங்கும் யோசனையினை செயல்படுத்தினேன் என்றார்.“டிசம்பர் 2023-க்குள் அல்லது அதற்கு முன் குப்பை இல்லாத எங்கள் கிராம பஞ்சாயத்தை பசுமைக் கிராமமாக மாற்றுவோம் என்று உறுதியளிக்கிறோம்” என கனாய் நம்பிக்கை தெரிவித்தார்.
குப்பைகள் சேகரிக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்ய அரசின் நிலம் கிடைத்துள்ளது. அங்கு மறுசுழற்சி அலகு அமைக்கும் முயற்சி நடைபெறுகிறுது. இது தவிர டயபர் அழிப்பான் இயந்திரங்களும் தற்போது நிறுவப்பட்டு வருகின்றன. இதுபோன்ற இயந்திரம் ஜம்மு & காஷ்மீரில் நிறுவப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
யாரு சாமி இவரு? 20 நிமிடத்தில் 25 மாடி கட்டிடத்தை ஏறி சாதித்த குரங்கு மனிதன்