தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, துணிக்கடைகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து, வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகின்றன.
வித்தியாசமான பரிசு (Strange gift)
அந்த வரிசையில், முதல்பரிசாக தங்கநாணயமும், 2வது பரிசாக ஆடும் வழங்கப்படும் என திருவாரூரில் இங்கும் துணிக்கடை ஒன்று அறிவித்திருக்கிறது
தீபாவளி பண்டிகை நவம்பா் 4-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே புத்தாடைக்கு முதல் இடம் உண்டு. அத்தகைய புத்தாடைகள் விற்பனை செய்யும் துணிக்கடைகள் அதிகரித்துள்ளன.
நவ.4ம் தேதி (Nov.4)
தீபாவளி பண்டிகை நவம்பா் 4-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே புத்தாடைக்கு முதல் இடம் உண்டு. அத்தகைய புத்தாடைகள் விற்பனை செய்யும் துணிக்கடைகள் அதிகரித்துள்ளன.
குலுக்கல் பரிசு (Gift)
இச்சூழலில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக துணிக்கடைகள் பல்வேறு பரிசுகளை அறிவிப்பது வழக்கம். அதில் துணி வகைகள், வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக அறிவித்து பரிசுக் குலுக்கல் மூலம் வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வருவார்கள்.
2-வது பரிசு ஆடு (Goat Gift)
இதன்படி இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் பரிசு ஒருவருக்கு 4 கிராம் தங்க நாணயம், 2 முதல் 4வது பரிசு வரை 4 பேருக்கு ஆடு, 5 வது பரிசு 25 பேருக்கு பட்டுப்புடவை பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஆடுகளைப் பரிசாக அறிவித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தொழில்கள் முடக்கம்
இதுகுறித்து ஜவுளிக்கடை உரிமையாளர் மணிமுருகன் கூறுகையில், “எனது ஜவுளிக்கடைக்கு வரும் அனைவரும் கிராமப்புறத்தைச் சார்ந்தவர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. பலரும் வேலை இழந்து சொந்த ஊருக்கு திரும்பி விட்டார்கள்.
அவர்களில் பலர் சுயமாக வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முனைப்புக் காட்டி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் யாரேனும் எனது ஜவுளிக்கடையில் துணி வாங்கி இருந்தால் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆடு வழங்குவதன் மூலம் அவர்களது கவனம் ஆடு வளர்ப்பில் செல்லக்கூடும்.இந்தப் புதிய முயற்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க...
வேலைவாய்ப்பு: 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் OLAநிறுவனம்!
OLA தொழிற்சாலையில் 10,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு!
தொடங்கியது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை! முன்பதிவு செய்யுங்கள்!