Blogs

Friday, 06 August 2021 09:06 AM , by: R. Balakrishnan

Credit : Dinakaran

தங்கத்தை நகையாகவோ, நாணயங்களாகவோ முதலீட்டு நோக்கில் மட்டும் வாங்க சிலர் விரும்புவார்கள். இது போன்றவர்களை இலக்காக வைத்து 2015ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது தான் தங்கப் பத்திரத் திட்டம் (Gold Bond Scheme). இத்திட்டத்தில் தங்கத்தை பொருள் வடிவில் வாங்காமல் பத்திர வடிவில் வாங்கி விலையேற்ற பலனை பெற முடியும். தனி நபர் ஒருவர் குறைந்த பட்சம் ஒரு கிராமிலிருந்து அதிகபட்சம் 500 கிராம் எடைக்கு இணையான தங்கப் பத்திரங்களை வாங்கலாம்.

தற்போதைய விற்பனையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3 ஆயிரத்து 146 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணையதளம் (Online) மூலம் விண்ணப்பித்து தொகையை செலுத்துபவர்கள் இதில் 50 ரூபாய் தள்ளுபடியும் பெற முடியும். வங்கிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட சில அஞ்சலகங்களில் இப்பத்திரங்களை பொது மக்கள் வாங்க முடியும். இந்த பத்திரங்களை 8 ஆண்டுகளுக்கு பிறகு அரசிடம் திரும்பத் தந்து அப்போதைய தங்கத்தின் விலையை பெற்றுக்கொள்ளலாம்.

புதிய அறிவிப்பு

அரசு தங்க பத்திரங்களில் முதலீடு செய்து உள்ள முதலீட்டாளர்கள் (Investors) தாங்கள் விரும்பும் பட்சத்தில், தங்கள் முதலீட்டிலிருந்து முதிர்வு காலத்துக்கு முன்னதாக வெளியேறிக் கொள்ளலாம் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அரசின் தங்க பத்திர வெளியீடுகள், பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பத்திரங்களின் முதிர்வு காலம், எட்டு ஆண்டுகள். இருப்பினும், ஐந்து ஆண்டுகளுக்கு பின், முதலீட்டிலிருந்து வெளியேற விரும்பும் பட்சத்தில் வெளியேறலாம்.

இதன்படி, 2016- – 17 நிதியாண்டின் பத்திர வெளியீட்டின்போது முதலீடு செய்து, ஐந்து ஆண்டு தாண்டியவர்கள், தற்போது முதிர்வுகாலத்துக்கு முன்னதாக, 8ம் தேதி வெளியேறலாம். விலை 1 யூனிட், 4,804 ரூபாயாக இருக்கும். முதலீட்டை பணமாக மட்டுமே பெறலாம்; தங்கமாக பெற முடியாது.

கடந்த, 2016 – 17 ஆண்டு இரண்டாம் கட்ட வெளியீட்டின்போது, தங்கத்தின் விலை, 1 யூனிட் அல்லது 1 கிராம் 2,600 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பழைய நாணயங்கள் விற்பனையில் எச்சரிக்கை தேவை: ரிசர்வ் வங்கி!

நம்பகத்தன்மை

இது தவிர முதலீட்டு தொகைக்கு ஆண்டுக்கு இரண்டரை சதவிகித வட்டியையும் அரசு தருகிறது. தேவைப்பட்டால் 5 ஆண்டுகளில் கூட பத்திரத்தை திரும்பத் தந்து அப்போதைய தங்கத்தின் விலையை பெறலாம். தங்கத்தின் விலையை நீண்ட கால நோக்கில் கவனித்து பார்க்கும் போது அது தொடர்ந்து உயர்ந்து வருவது உறுதியாகிறது. எனவே தங்கத்தின் விலை உயர்வு பலனுடன் இரண்டரை சதவிகித வட்டியும் கிடைப்பதால் இது ஆதாயம் மிகுந்த திட்டம் என முதலீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர். அரசினால் வழங்கப்படும் திட்டம் என்பதால் இது நம்பகத்தன்மை மிக்கது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க

முக்கிய பலன்களை அளிக்கும் தேசிய பென்ஷன் திட்டம்!

EPFO புதிய வசதி: அவசரத் தேவைத்கு PF கணக்கிலிருந்து ரூ. 1 லட்சம் முன்பணம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)