இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 3 December, 2019 4:20 PM IST

தமிழர்களின் பானம் என கொண்டாடப்படும் நீரா பானம் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழக அரசு தேர்வு செய்யப்பட்ட தென்னை மரங்களில் இருந்து மட்டுமே நீரா பானம் எடுக்க அரசு அனுமதித்துள்ளது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம், பழநியில் விற்பனை மையங்களை அமைக்க வேளாண் துறை திட்டமிட்டு வருகின்றன.

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 30,417 எக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடியாகிறது. கேரளாவை தொடர்ந்து  தமிழகத்திலும் நீரா பானம் எடுக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது தகுதியான ஆயிரம் தென்னை மரங்களில் இருந்து மட்டுமே நீரா பானம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மரத்தில் இருந்து தினமும் 1.5 லிட்டர் நீரா பானம் எடுத்து வருகின்றனர். சேகரித்த நீரா பானத்தை விவசாயிகள் தென்னை உற்பத்தியாளர் சங்கத்திடம்  கொடுக்கின்றனர். அவர்கள் அதனை சுத்திகரிப்பு செய்து, குளிர வைத்து அருந்துவதற்கு ஏற்றபடி தயார் செய்து கொடுக்கின்றனர்.

நீராவில் பல்வேறு இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உடலுக்கு தேவையான சோடியம், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ், சர்க்கரை, புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. தற்போது திண்டுக்கல்லில் 10, பழநியில் 4 இடங்களில் நீரா பானம் விற்பனை மையம் அமைக்கப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதற்கான தேவை மேலும் அதிகரித்திருப்பதால் விற்பனை மையங்களை அதிகப் படுத்த அரசு முயற்சித்து வருகிறது.

English Summary: Good News for Coconut Farmers: Based on Demand TN Govt Plan to Increase The Sales Point
Published on: 03 December 2019, 04:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now