தங்கத்தில் முதலீடு (Gold investment) செய்வதன் மூலம் நிதி பாதுகாப்பை பெறுவதோடு, பருவ நிலை மீது பாதிப்பை ஏற்படுத்தும் கார்பன் வெளிப்பாட்டின் தாக்கத்தையும் குறைத்துக் கொள்ளலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. ஒருவருடைய முதலீட்டு தொகுப்பில், 10 – 15 சதவீதம் வரை தங்கம் இருக்கலாம் என கருதப்படுகிறது. முதலீடு நோக்கில் தங்கம் அளிக்கும் பலன்களில், தற்போது பருவ நிலை மாற்றம் தொடர்பான பலனும் சேர்ந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் ஆய்வு தெரிவிக்கிறது.
அர்ஜெண்டே
‘அர்ஜெண்டே’ எனும் பருவநிலை இடர் ஆலோசனை நிறுவனத்துடன் இணைந்து கவுன்சில் நடத்திய ஆய்வில், முதலீடு தொகுப்பில் தங்கம் இருப்பது, அதன் கார்பன் வெளியீட்டின் தாக்கத்தை குறைப்பதாக தெரிவிக்கிறது.பருவ நிலை பாதிப்பின் தீவிரம், அனைத்து துறைகளிலும் கார்பன் வெளிப்பாட்டின் தாக்கத்தை குறைப்பது அவசியமாக கருதப்படும் நிலையில், முதலீடு (Investment) தொகுப்புகளில் கார்பன் வெளிப்பாடு தாக்கத்தை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என கவுன்சில் தெரிவித்துள்ளது.
தங்க முதலீடு கார்பன் வெளிப்பாடு தாக்கத்தை குறைக்க உதவுவதோடு, முதலீட்டில் பருவநிலை மாற்றத்தின் இடரையும் எதிர்கொள்ள உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பெட்ரோல் பங்க்குளில் பேட்டரி விற்பனை!