ஒருங்கிணைந்த பண்ணைய திட்டதின் கீழ் உப தொழில் செய்ய விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என மயிலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்.துள்ளார். விழுப்புரம் மாவட்டம், மயிலம் வட்டாரத்தில் உளுந்து சாகுபடி செய்யும் 100 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
நீடித்த வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் சார்பாக மானாவாரி மேம்பாடு திட்டம் மூலம் அப்பகுதிகளில் ஒரு ஹெக்டேர் மற்றும் அதற்கு மேல் மானாவாரியாக உளுந்து சாகுபடி செய்யும் 100 விவசாயிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்கள் செய்யும் உபதொழிலுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. மானிய விவரம் பின்வருமாறு
- பயிர் சாகுபடிக்கு - ரூ 10,000/-
- 2 கறவை மாடுகள் - ரூ 30,000/-
- 10 ஆடுகள் வளர்க்க - ரூ 15,000/-
- 20 நாட்டுக் கோழிகள் - ரூ 6,000/-
- தேனீ வளர்க்க - ரூ 4,800/-
- மண் புழு உரம் தயாரிக்க - ரூ 25,000/-
- பழ மரங்கள் வளர்க்க - ரூ 5,000/-
- கால்நடைகளுக்கான தீவன மரம் வளர்க்க - ரூ 4,200/-
என மானியம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் குறித்த மேலும் விபரங்களுக்கு மயிலம் உதவி வேளாண்மை அலுவலகத்தை அணுகாலம் என தெரிவித்தார்.
Anitha Jegadeesan
Krishi Jagran