Blogs

Wednesday, 27 November 2019 05:28 PM , by: Anitha Jegadeesan

கோழிப்பண்ணைத் தொழிலை லாபகரமாக நடத்த பண்ணையாளர்களுக்கு அரிய வாய்ப்பு காத்திருப்பதாக நாமக்கல் மண்டலத்தில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

வட மாநிலங்களில் குளிர் காலம் தொடங்கியதை அடுத்து அங்கு முட்டைகளின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் டிசம்பர் மாதங்களில் இதன் தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால்  ஒரு முட்டை ரூ.4.50 வரை விற்பனையாவதற்கு வாய்ப்புண்டு என நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

வட மாநிலங்களில் முட்டையின்  கையிருப்பு குறைவாக இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.  மேலும் ஹைதராபாத், ஹோஸ்பேட்  பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் , கடந்த 6 மாதமாக முட்டை உற்பத்தி குறைந்து  வருகிறது.

இது போன்ற காரணங்களினால் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.10-க்கும் மேல் இருக்கும் என    நாமக்கல் மண்டலத்தில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. எனவே  கோழி பண்ணை வைத்திருப்பவர்கள் எதிர்கால தேவையை கவனத்தில் கொண்டு லாபம் பெற அறிவுறுத்தப் படுகிறார்கள்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)