பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 9 October, 2022 9:13 AM IST
PF Pension

மாத சம்பளக்காரர்களின் பிஎப் கணக்கை நிர்வாகம் செய்யும் ஈபிஎப்ஓ அமைப்பு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஈபிஎப்ஓ அமைப்பில் பிஎப் கணக்கு வைத்திருக்கும் 7 கோடி பேருக்கும் 2022 ஆம் நிதியாண்டுக்கான வட்டி தொகையை அக்டோபர் மாதத்தின் இறுதிக்குள் டெப்பாசிட் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே மத்திய அரசு அறிவித்தது போது 2022 ஆம் நிதியாண்டுக்கான வைப்புத் தொகைக்கு 8.1 சதவீதம் வட்டி வருமானத்தை அளிக்க உள்ள நிலையில் பலர் 81000 ரூபாய் அளவிலான தொகையைப் பெற உள்ளனர்.

EPFO அமைப்பு

EPFO அமைப்பு 2022ஆம் நிதியாண்டுக்கான வைப்புத் தொகைக்கு எவ்வளவு வட்டி தொகையைச் செலுத்த வேண்டும் என்பதைக் கணக்கிட்டு உள்ளது, தற்போது வெளியான தகவல் படி சுமார் 7 கோடி ஊழியர்களுக்கு சுமார் 72000 கோடி ரூபாய் அளவிலான தொகையை அளிக்க வேண்டியுள்ளது. கடந்த வருடம் பிஎப் கணக்காளர்கள் சுமார் 6-8 மாதம் வரையில் வட்டி பணத்திற்காகக் காத்திருந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா தொற்று போன்ற எந்த பெரிய பாதிப்புகளும் இல்லாத காரணத்தால் மத்திய அரசு தாமதிக்காமல் பணத்தை விரைவாகச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

81,000 ரூபாய்

8.1 சதவீதம் வட்டி வருமானம், அப்படியானால் உங்கள் பிஎப் கணக்கில் 1 லட்சம் ரூபாய் இருந்தால் உங்கள் 8100 ரூபாய் வட்டி பணம் கிடைக்கும். இதுவே 5 லட்சம் ரூபாய் என்றால் 40500 ரூபாய், 7 லட்சம் ரூபாய் என்றால் 56700 ரூபாய், 10 லட்சம் ரூபாய் என்றால் 81000 ரூபாய். உங்கள் பிஎப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு எவ்வளவு வட்டி வருமானம் கிடைக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள்.

PF பேலன்ஸ்

உங்கள் பிஎப் கணக்கில் இருக்கும் பேலென்ஸ் தொகையை தெரிந்துகொள்ளப் பல வழிகள் இருந்தாலும் மிஸ்டு கால் மூலம் செய்வது மிகவும் எளிதான ஒன்று. EPFO தளத்தில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 011-22901406 இந்த எண்ணுக்கு அழைத்தால் மெசேஜ் வாயிலாகத் தகவல்களைப் பெறலாம். இதைத் தொடர்ந்து EPFO ​​இணையதளம் வாயிலாகவும், UMANG செயலி வாயிலாகவும் உங்கள் பிஎப் பேலென்ஸ் தொகையை செக் செய்ய முடியும்.

மேலும் எஸ்எம்எஸ் வாயிலாகவும் பிஎப் பேலென்ஸ் தொகையை செக் செய்ய முடியும். 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO என்று மெசேஜ் செய்தால் போதுமானது.

மேலும் படிக்க

PF வட்டி எப்போது கிடைக்கும்? வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

English Summary: Good news for PF users: Rs 81,000 deposit soon!
Published on: 09 October 2022, 09:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now