Blogs

Thursday, 08 September 2022 06:59 PM , by: R. Balakrishnan

SBI New Scheme

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிலையான வைப்புத் தொகை திட்டத்தில் இருந்து பாதியிலேயே பணத்தை எடுத்துக் கொள்ளும் படியான ஒரு அருமையான திட்டத்தை எஸ்பிஐ வங்கி வழங்கியுள்ளது. மேலும் இத்திட்டம் குறித்தான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SBI வங்கி (SBI Bank)

இந்திய ரிசர்வ் வங்கி வட்டிகளுக்கான ரெப்போ விகிதத்தை உயர்த்தியதை தொடர்ந்து அனைத்து வங்கிகளும் நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி விட்டன. பொதுவாகவே வங்கிகளின் நிலையான வைப்புத் தொகைக்கான முதிர்வுத் தேதிக்கு முன்பாகவே தொகையை எடுக்க நேரிடும் சமயங்களில் அந்த வங்கிகளிலிருந்து முதலீட்டாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட சில வங்கிகளில் மட்டும் முதிர்வு தேதிக்கு முன்பே தொகையை பெற விரும்பினால் நிலையான வைப்பு தொகைக்கு அபராதம் விதிக்கப் படுவதில்லை. அதில் பாரத ஸ்டேட் வங்கியும் ஒன்றாகும்.

அதாவது எஸ்பிஐ வங்கி மல்டி ஆக்ஷன் டெபாசிட் திட்டம் என்கிற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இத்திட்டத்தின் மூலமாக முதலீட்டாளர்கள் அபராதம் செலுத்தாமல் எப்பொழுது வேண்டுமானாலும் பணத்தை திருப்பி பெற்றுக்கொள்ளலாம். அதாவது எஸ்பிஐ மல்டி ஆக்ஷன் டெபாசிட் திட்டத்தில் மற்ற நிலையான வைப்புத் திட்டத்தைப் போலவே வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மேலும் மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் அதிகமாக வட்டி வீதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான பதவிக்காலம் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்

அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே பணத்தை பெற விரும்பினால் எந்த வித அபராதமும் செலுத்தாமல் தொகையை பெற்றுக் கொள்ளலாம். பணம் எடுப்பதில் எந்த ஒரு வரம்பு தடையும் விதிக்கப்படவில்லை. மேலும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து ரூபாய் 1000 மடங்குகளில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். மேலும், எஸ்பிஐ மல்டி ஆக்ஷன் டெபாசிட் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தங்களது சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கிற்கான சராசரி மாதாந்திர இருப்பை வாடிக்கையாளர்கள் கட்டாயமாக பராமரிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் வர இது தான் ஒரே வழி!

10 ரூபாய் நாணயத்தில் பைக்: வைரலாகும் இளைஞரின் செயல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)