Blogs

Tuesday, 23 March 2021 09:07 PM , by: KJ Staff

Credit : Times of India

இந்தியாவின் முன்னணி வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான பல்வேறு ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit) திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழக்கமான வட்டி லாபத்தை விடக் கூடுதல் வட்டி கிடைக்கும். கொரோனா (Corona) பாதிப்பைத் தொடர்ந்து சென்ற மே மாதத்தில் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை வங்கிகள் அறிவித்தன. இத்திட்டம் இந்த மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில் டெபாசிட் செய்தால் வழக்கமான வட்டியை விட 0.80 சதவீதம் கூடுதல் வட்டி லாபம் கிடைக்கும். இந்நிலையில், சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கான கால அவகாசம் ஜூன் மாதம் வரையில் நீட்டிக்கப்படுவதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)" அறிவித்துள்ளது.

சிறப்பு சேமிப்புத் திட்டம்

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான SBI, ஐந்தாண்டு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 5.4 சதவீத வட்டி வழங்குகிறது. ஆனால் சிறப்புத் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்தால் 6.20 சதவீத வட்டி லாபத்தைப் பெறலாம். சென்ற ஆண்டின் மே மாதத்தில் ‘Vicare Senior Citizen’ என்ற பெயரில் இந்த சிறப்பு சேமிப்புத் திட்டத்தை மூத்த குடிமக்களுக்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்தது. அதன் பின்னர் தற்போது மூன்றாவது முறையாக இத்திட்டத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வட்டி லாபம்

மூத்த குடிமக்களுக்கு மட்டுமே இந்த சிறப்புச் சலுகையின் கீழ் வட்டி லாபம் கிடைக்கும். மற்ற வாடிக்கையாளர்களுக்கு ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் 2.9 சதவீதம் முதல் 5.4 சதவீதம் வரையில் மட்டுமே. சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தின் கீழ் ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கியில் 0.75 சதவீதம் கூடுதல் வட்டி லாபம் கிடைக்கும். சிறப்புத் திட்டத்தின் கீழ் முதலீடு (Investment) செய்தால் 6.25 சதவீதம் வரையில் லாபம் பெறலாம். ஐசிஐசிஐ (ICICI) வங்கியில் 80 சதவீதம் கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது. வழக்கமான வட்டியை விட இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ் 6.30 சதவீத வட்டி லாபம் பெறலாம்.

பேங்க் ஆஃப் பரோடாவில் சற்று அதிகமாக 100 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டு வட்டி வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் 5 ஆண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகளுக்குள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு 6.25 சதவீத வட்டி கிடைக்கிறது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

வீட்டுக் கடனுக்கு கூடுதல் பணம் கொடுக்கிறது டாப் அப் லோன்!

சம்பளம் மாதிரி மாத வருமானம் தரும் SBI-யின் சூப்பர் திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)