தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் எண்ணற்ற பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர். அவர்களுக்கு நற்செய்தியாக தற்போது உத்திரவாத திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) உள்ள நாட்டின் லட்சக்கணக்கானவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஓய்வூதிய கட்டுப்பாட்டு அமைப்பான PFRDA தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) கீழ் குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட வருவாய் திட்டத்தை (Minimum Assured Return Scheme - MARS) கொண்டு வர உள்ளது.
அசத்தல் திட்டம்
ஆலோசகரை நியமிக்க PFRDA உத்தரவு வெளியிட்டுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) இந்த திட்டத்தை வடிவமைக்க ஆலோசகர்களுக்கு நியமிக்க கோரிக்கையை (RFP) வெளியிட்டுள்ளது.
EPFO புதிய வசதி: அவசரத் தேவைத்கு PF கணக்கிலிருந்து ரூ. 1 லட்சம் முன்பணம்
இது தொடர்பாக ஓய்வூதிய நிதி மற்றும் செயல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, அதன் அடிப்படையில், திட்டம் தயாரிக்கப்படும். PFRDA திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட வருமானத் திட்டம் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும்.
தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா (APY) ஆகியவற்றில் அம்சங்களை இணைப்பதில் PFRDA நிறைய பணிகளை செய்துள்ளது. ஆனால் இவை அனைத்தும் மத்திய அரசின் திட்டங்கள். PFRDA கொண்டுவர திட்டமிட்டுள்ள திட்டம் அதன் முதல் தனித்துவமான திட்டமாக இருக்கும். ஏனெனில் PFRDA இதுவரை எந்த உத்தரவாத திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
இந்த ஓய்வூதிய உத்தரவாதம் திட்டத்தின் சந்தையுடன் இணைக்கப்படும் என்று PFRDA கூறுகிறது. முதலீட்டு மீதான வருவாயின் உத்தரவாத வருமானத்தின் பங்கை நிதி மேலாளர்கள் தீர்மானிக்க வேண்டும்.
மேலும் படிக்க
முக்கிய பலன்களை அளிக்கும் தேசிய பென்ஷன் திட்டம்!
வீட்டுக் கடனுக்கான வட்டி குறைவு: 15 வங்கிகள் அறிவிப்பு!