இந்துசமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதால், விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையில், திருநெல்வேலி உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக அலுவலக உதவியாளர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்குவிரைவில் ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
அலுவலக உதவியாளர் (Office Assistant)
காலியிடங்கள் : 2
கல்வித் தகுதி (Educational Qualification)
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் (Salary)
ரூ. 15,700 – 50,000
ஓட்டுநர் (Staff Driver)
காலியிடங்கள்: 1
கல்வித் தகுதி (Educational Qualification)
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். நல்ல உடற்தகுதியுடன் இருக்க வேண்டியது கட்டாயம்.
சம்பளம் (Salary)
ரூ. 19,500 – 62,000
வயதுத் தகுதி (Age Limit)
-
01.07.2021 அன்று விண்ணப்பதாரர் 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
-
இருப்பினும் BC/MBC/DNC பிரிவினர் 34 வயது வரையிலும், SC/ST பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை (How to apply)
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி
உதவி ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை,
ஏ.ஆர்.லைன் ரோடு,
பாளையங்கோட்டை,
திருநெல்வேலி.
விண்ணப்பிக்க கடைசி தேதி (Dead line)
15.04.2022
மேலும் படிக்க...
தினமும் 3 டம்ளர் பால் மட்டும்- அதிகரித்தால் இத்தனைச் சிக்கல்கள்!
ஐஸ் வாட்டர் குடித்தால் இதயத் துடிப்பு குறையும்- நிபுணர்கள் எச்சரிக்கை!