நடிகர் ரஜினிகாந்தை வைத்தே, தமிழக அரசியலில், அவ்வப்போது புயலைக் கிளப்புவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது, ரஜினிக்கு ஆளுநர் பதவி வழங்குவது பற்றி பிஜேபி மேலிடம் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பளீச் பேட்டி
அண்மையில் டெல்லி சென்றுவிட்டு, தமிழகம் திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், திடீரென, ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துப் பேசினார்.
இவ்விரு தலைவர்களுக்கும் இடையேயான சந்திப்பில், என்ன பேசப்பட்டிருக்கும் என தமிழக அரசியல் களம் ஆராயத் தொடங்கிய நிலையில், நாங்கள் அரசியல் பேசினோம் எனப் பளீச்செனப் போட்டு உடைத்தார் ரஜினி.
கட்சியை மேம்படுத்த
ரஜினியை பயன்படுத்திக் கொள்வதில் பாரதிய ஜனதா வட்டாரத்தில் ஆதரவும் இருக்கிறது. உண்மையில் கவர்னர் ஆர்.என்.ரவி-ரஜினி சந்திப்பில் என்னதான் நடந்திருக்கும் என்ற கேள்விக்குறி எல்லோரது மனதிலும் எழுந்துள்ளது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் பாரதிய ஜனதாவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் மிக, மிக தீவிரமாகி இருக்கிறார்கள். அந்த இலக்கின் ஒரு பகுதிதான் கவர்னர் ரவி-ரஜினி சந்திப்பு என்கிறார்கள்.
ஆதரவும், எதிர்ப்பும்
ரஜினியை பயன்படுத்திக் கொள்வதில் பாரதிய ஜனதா வட்டாரத்தில் ஆதரவும் இருக்கிறது. எதிர்ப்பும் இருக்கிறது. பிரதமர் மோடி, ரஜினியை விரும்புவதாகவும், உள்துறை மந்திரி அமித்ஷா விரும்பவில்லை என்றும் கூட தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினியை தங்கள் பக்கம் இழுத்து சில பொதுக்கூட்டங்களில் பேச வைத்தாலே போதும் என்று கூட நினைக்கிறது பிஜேபி தலைமை.
ஆளுநராகிறார் ரஜினி
இதற்காக ரஜினிக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தயாராக இருக்கிறார்களாம். தற்போது சில மாநிலங்களில் கவர்னர் பதவி காலியாகவே உள்ளது. எனவே சிறிய மாநிலம் ஒன்றில் ரஜினியை கவர்னர் பதவியில் அமர வைக்கலாம் என்று கூட பேசப்பட்டதாக சமீபத்தில் ஒரு வார இதழில் தகவல் வெளியாகி இருந்தது. டெல்லி வட்டாரத்தில் இது உறுதி செய்யப்படுகிறது.
வாக்கு வங்கி
தமிழக அரசியலைப் பொருத்தவரை ரஜினிக்கு மிகப்பெரிய வாக்கு வங்கி இல்லை. ஆதரிக்கும் மன நிலையில் இருந்த நடுநிலை மக்களும் இப்போது ரஜினியை கண்டு கொள்வதில்லை. என்றாலும் ரஜினியை முன்நிறுத்தி ஏதோ ஒரு அலையை உருவாக்க பாரதிய ஜனதாவில் சில மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். ஆனாலும், ஆண்டவன் சொல்வதைத்தானே, இந்த அருணாச்சலம் முடிப்பான்.
மேலும் படிக்க...
தேசத்தின் சிறந்த முதல்வர்கள் பட்டியல் - 3ம் இடத்தில் மு.க.ஸ்டாலின்!