திருப்பதி-திருமலையில், லட்டு பிரசாதம் எடுத்துச் செல்ல, எளிதில் உரமாகக் கூடிய பசுமை பைகளின் விற்பனை துவங்கியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (Environmental protection)
சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தவிர்க்க, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காதப் பொருட்களைப் பயன்படுத்துவதே பொருத்தமானது என்பதை மத்திய - மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. எனினும் மக்களின் ஒத்துழைப்பு மட்டுமே, இந்தத் திட்டத்திற்கு முக்கியமானது.
பிளாஸ்டிக்கிற்குத் தடை (Ban on plastic)
இதன் ஒருபகுதியாகத் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதேபோல் ஆந்திராவிலும், பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்த பல்வேறுக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள திருமலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எனினும், ஏழுமலையான் லட்டு பிரசாதம் எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் கவர்கள், 50 மைக்ரானுக்கு மேல் இருந்ததால் தேவஸ்தானம் அதை பயன்படுத்தி வந்தது. மேலும் அதற்கு மாற்றாகவும் பல்வேறு காகித பைகள், சணல் பைகள் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்தி வந்தது.
இருப்பினும், லட்டு பிரசாதத்தின் தரத்தை அப்படியே பாதுகாக்கும் வகையில் எளிதில் மக்கி உரமாகும் தன்மை வாய்ந்த மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய லட்டு பைகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
சோளத்தட்டைப் பைகள் (Maize bags)
அதன் விற்பனை திருமலையில் தற்போது துவங்கியுள்ளது. சோளத் தட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த பைகள் ஒருமுறை பயன்படுத்தி எறியப்பட்டாலும், 90 நாட்களுக்குள் மக்கக் கூடியவை.
பாதிப்பு இல்லை (No vulnerability)
இவற்றை கால்நடைகள் உட்கொண்டாலும் அவற்றிற்கு பாதிப்பு எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எல்லா மாநிலங்களுமே மேற்கொள்ளலாம் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க...
கொரோனாத் தடுப்பூசி போடாவிட்டால், மாதம் ரூ.15,000 கட்-அதிரடி அபராதம்
அனைவருக்கும் பென்சன்: சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் சலுகைகள்!