Blogs

Friday, 12 August 2022 08:13 PM , by: Elavarse Sivakumar

வீட்டு வாடகைக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படும் விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், இருப்பினும் இந்த ஜிஎஸ்டி யார், யாருக்கு கிடையாது என்பது குறித்து விளக்கத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி கூட்டம் நடைபெற்றது. இதில் வரி திருத்தம், புதிதாக சில பொருட்களுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த முடிவுகள் ஜூலை 18ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டன.

சம்பளதாரர்களுக்கு

இந்நிலையில், வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி விதிக்கும் விதிமுறையும் ஜூலை 18ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி யாரெல்லாம் வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்?
சம்பளத்துக்கு வேலை செய்யும் ஊழியர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தால், அவகளுக்கு ஜிஎஸ்டி இல்லை. எனினும், ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்துகொண்ட நபர்கள், அதாவது தொழில் செய்பவர்கள் மட்டுமே ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

அலுவலகங்கள்

இதற்கு முன் அலுவலக இடங்கள், வர்த்தக இடங்கள் போன்றவற்றுக்கான வாடகை தொகைக்கு மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வந்தது. வீடு குத்தகைக்கு எடுத்திருந்தால் அதற்கு எந்தவொரு வரியும் கிடையாது.
ஜூன் மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உரிமையாளருக்கு வரி இல்லை

எனினும், இனி வீட்டு வாடகை தொகைக்கும், வீடு குத்தகை எடுத்திருந்தால் அதற்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படும். வீடு வாடகைக்கு எடுக்கும் நபர்தான் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். வீட்டு உரிமையாளருக்கு வரி கிடையாது.

யாருக்கு பொருந்தும்?

ஜிஎஸ்டியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும். அதாவது, பொதுவாக அலுவலக இடங்கள், வர்த்தக இடங்களில் அல்லாமல் வீடுகளை வாடகைக்கு எடுத்து தொழில் நிறுவனம் அல்லது வியாபாரம் செய்பவர்கள் உண்டு. இவர்கள் இதுவரை ஜிஎஸ்டி செலுத்தாமல் இருந்து வந்தனர். இந்நிலையில், வீடு வாடகைக்கு எடுத்திருந்தாலும், தொழில் செய்பவர்கள், அதாவது ஜிஎஸ்டியில் பதிவு செய்தவர்கள் வாடகை தொகைக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க...

தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம்?

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)