இளைஞர் ஒருவர் 7.35 நொடியில் 10 மாஸ்க்கள் அணிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாக பரவி வருகிறது.
சாதனை (Record)
இந்த உலகில் மனிதர்கள் சிலர், வித்தியாசமான முயற்சிகளை செய்து உலகை தங்கள் வசம் கவர்ந்துள்ளனர். அதன்மூலம் சாதனையும் படைத்துள்ளனர். இன்னும் சிலரோ, சாதனைப் படைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இப்படியாக உலக சாதனை படைத்தவர்களின் வீடியோக்களை guinness world records என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் அவ்வப்போது பகிர்ந்து வருகின்றனர்.
கொரோனா விதிகள் (Corona rules)
கொரோனா காலம் என்பதால், மக்கள் மத்தியில் மாஸ்க் அணிவது என்பது புதிய வழக்கமாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் மக்கள் பொது இடங்களுக்கு வரும் போது மாஸ்க் அணிந்து தான் வர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மாஸ்க் அணிவதிலேயே ஒரு இளைஞர் உலக சாதனை படைத்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர் இந்த சாதனையை கடந்த சில மாதங்களுக்கு முன்பே செய்துவிட்டாலும்
7.35 நொடிகளில் 10 மாஸ்க் (7.35 நொடிகளில் 10 மாஸ்க்)
இந்த வீடியோ தற்போது மீண்டும் கின்னஸ் உலக சாதனைகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டதால் மீண்டும் வைரலாகி வருகிறது.ஜார்ஜ் பீல் என்ற இளைஞர் வெறும் 7.35 நொடிகளில் 10 மாஸ்க்களை கழட்டி மாட்டியுள்ளார்.
3.35 லட்சம்
இந்த சாதனை பலரால் ரசிக்கப்பட்ட நிலையில் இதற்கு 3.35 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது. வேகமாக ஒரு மாஸ்க்கை அணிவதே கஷ்டமாக உள்ள நிலையில், இவர் 10 மாஸ்க்குடன் எப்படி மூச்சு விட்டோரோ, அப்பப்பா!
மேலும் படிக்க...