Blogs

Wednesday, 11 September 2019 02:25 PM

உணவே மருந்து, மருந்தே உணவு

சொல் வளம் மிக்க மொழிகளில் தமிழுக்கு எப்பொழுதும் முதலிடம் உண்டு.  மற்ற எந்த மொழிகளிலும் இத்தனை கருத்தாழம் மிக்க பழமொழிகள் இருந்ததில்லை. உணவில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை பழமொழி வடிவில் நமக்கு தந்துள்ளனர்.

  • காட்டுலே புலியும், வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
  • போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே
  • பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா
  • சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.
  • எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல
  • தன் காயம் காக்க வெங்காயம் போதும்
  • வாழை வாழ வைக்கும்
  • அவசர சோறு ஆபத்து
  • ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்
  • இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு
  • ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை
  • இருமலை போக்கும் வெந்தயக் கீரை
  • உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.
  • உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி
  • கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்
  • குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை
  • கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை
  • சித்தம் தெளிய வில்வம்
  • சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி
  • சூட்டை தணிக்க கருணை கிழங்கு
  • ஜீரண சக்திக்கு சுண்டக்காய்
  • தலை வலி நீங்க முள்ளங்கி சாறு
  • தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை
  • பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
  • மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு
  • வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
  • வாத நோய் தடுக்க அரைக் கீரை
  • வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்
  • பருமன் குறைய முட்டைக்கோஸ்
  • பித்தம் தணிக்க நெல்லிக்காய்

நோயற்ற  வாழ்வு வாழ எளிய பட்டியலை கொடுத்து விட்டு சென்றுள்ளனர் நாம் முன்னோர்கள். நாம் படிப்பதோடு நிற்காமல் அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது நமது கடமை.

நன்றி:வலை தகவல்

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)