Blogs

Saturday, 07 August 2021 08:55 PM , by: Elavarse Sivakumar

Credit : India Today

இருசக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு விற்பனையாளர்கள், ஹெல்மெட்டை  (Helmet) இலவசமாக வழங்க வேண்டும் என அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

தலைக்கவசம் (Helmet)

வாகன விபத்துக்களின் உயிரைக் காக்க ஏதுவாக உயிர்க் காக்கும் கவசமாக இருப்பது ஹெல்மட் (Helmet) எனப்படும் தலைக்கவசம்.

எனவே சாலையில் வாகனங்களை ஓட்டுபவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது சட்டத்துக்காக மட்டுமல்ல, அவர்களின் விலை மதிப்பற்ற உயிருக்கு பாதுகாப்புக்காகப்படவேண்டும் என்பதற்காகவும் தான்.

பாதிப்பு குறையும் (The vulnerability will decrease)

இதை அனைவரும் உணர்ந்துக் கொண்டால் பிரச்சனைகளும் இல்லை, விபத்துக்களும் குறையும். விபத்து நிகழ்ந்தாலும் பாதிப்பும் குறைவாகவே இருக்கும்.

மற்றவர்கள் மீது பழி (Blame it on others)

இருப்பினும் இந்தியாவைப் பொறுத்தவரை, சட்டத்தை மதிப்பதை விட, அவமதிக்கிறோம் என உணராமல் அவமதிப்பவர்கள் ஏராளம். கேட்டால், மற்றவர்கள் மீது பழிபோடுவார்கள்.

இதனைக் கருத்தில் கொண்டே, சட்டத்தை அமல்படுத்துவதுடன், சட்டம் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது கட்டாயமாகிறது.

மாநில அரசு அறிவுறுத்தல் (State Government Instruction)

அதன்படி தற்போது, இருசக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு விற்பனையாளர்கள், ஹெல்மெட் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று ஒரு அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதுவும் ஐஎஸ்ஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டாக இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை எந்த மாநிலம் வழங்கியிருக்கிறது தெரியுமா?

அரசு எச்சரிக்கை (Government warning)

ராஜஸ்தான் மாநில அரசு தான் இந்த கடும் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் போது இலவச ஹெல்மெட் வழங்காத டீலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவே ராஜஸ்தான் அரசு இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை விற்பனையாளர்கள் மற்றும் வியாபாரிகள் உரிய முறையில் பின்பற்றுகிறார்களா என்பதை அனைத்து மாவட்டங்களின் போக்குவரத்து அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டும். இந்த உத்தரவை ராஜஸ்தான் மாநில அரசு போக்குவரத்து துறை பிறப்பித்துள்ளது.

அமைச்சர் உறுதி (Minister confirmed)

இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் கூறுகையில்,, வாகன உற்பத்தியாளர்கள், டீலர்கள் இந்த உத்தரவை மீறக்கூடாது. அப்படி செய்தால் சாலை பாதுகாப்பு கண்ணோட்டத்தில் கடுமையான தவறு என்ற பிரிவின் கீழ் குற்றமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

குத்துச்சண்டையில் இந்தியாவிற்கு வெண்கலம்: லவ்லினா அசத்தல்!

கொரோனா தடுப்பூசி: 48 கோடி டோஸ் செலுத்தி இந்தியா புதிய சாதனை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)