உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசி (DNA Vaccine) செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உலகின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசியாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சைகோவ்-டி, 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் செலுத்த தகுதியான தடுப்பூசி என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
டிஎன்ஏ தடுப்பூசி (DNA Vaccine)
சிறுவர்களுக்கான தடுப்பூசி ஜனவரி 3ஆம் தேதி முதல் செலுத்தப்பட உள்ளதாக பிரதமர் மோடி (PM Modi) தெரிவித்துள்ளார். உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
சைடஸ் கெடிலா நிறுவனம் உருவாக்கி உள்ள ஊசி முறை அல்லாத சைகோவ்-டி தடுப்பூசிகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மூன்று தவணையாக செலுத்தப்படும் இத்தடுப்பூசிக்கு ஒப்பதல் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட்ட நிலையில் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சைடஸ் கெடிலா தொடங்கியது.
கால இடைவெளி (Time Interver)
உற்பத்தி திறன் அடிப்படையில் இளைஞர்களுக்கு முதலில் இந்த தடுப்பூசியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சைகோவ்-டி தடுப்பூசி (ZyCoV-D Vaccine) வரி உட்பட ரூ.358க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக ஒரு கோடி டோஸ்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 3 டோஸ்களைக் கொண்ட இந்தத் தடுப்பூசி, 28 மற்றும் 56 நாட்கள் இடைவெளியில் செலுத்த வேண்டும். 12 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்காக இந்தத் தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது. அதாவது, ஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தப்படாமல், தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில் (hypodermic needle) மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் செலுத்தப்படும்.
நீண்ட கால பயன்பாடு (Long time usage)
இந்தத் தடுப்பு மருந்து, மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பம் தொழில் ஆராய்ச்சி உதவிக் குழுவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு மருந்தை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை பாதுகாத்து நீண்ட காலத்துக்குப் பயன்படுத்த முடியும், 25 டிகிரி செல்சியஸ்வரை வைத்து, குறுகிய பயன்பாட்டுக்குப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
ஒமைக்ரான் வேகமாக பரவுகிறது: பில்கேட்ஸ் எச்சரிக்கை!
இந்தியாவில் ஓமைக்ரான் அதிகரித்தாலும் மிதமான பாதிப்பு மட்டுமே இருக்கும்!