இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மறு கொள்முதல் ஒப்பந்தத்தின் வீதத்தை 4% என்ற குறைந்த அளவில் எந்த மாற்றமும் இல்லாமல் வைத்துள்ளது. எனவே பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக வீட்டுக் கடன் வட்டி (House loan interest) விகிதங்களை மேலும் குறைத்துள்ளன. இதில் தற்போது 15க்கும் மேற்பட்ட வங்கிகள் தங்களது வீட்டுக் கடன்களை ஆண்டுக்கு 7% கீழ் வட்டியை குறைத்துள்ளன.
வீட்டு வட்டி குறைப்பு
வங்கிகள் குறைந்த விகிதங்களில் வீட்டுக் கடன்கள் வழங்குவதால் புதிய வீடு வாங்க வேண்டும் நினைப்பவர்கள், தங்கள் கனவை நனவாக்கும் நேரம் இப்போது அமைத்துள்ளது. எவ்வாறாயினும், வீடு வாங்க வேண்டும் நினைப்பவர்கள், தங்களுக்கு தேவையான விளிம்பு நிதிகள் மற்றும் அவர்களின் கடன் சுமை கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதோடு போதுமான வருமானம் (income) இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இதனால் அவர்கள் வங்கிகளில் வாங்கிய கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்த முடியும்.
கிரெடிட் ஸ்கோர் முக்கியம்
வீட்டுக் கடன் வாங்க நினைப்பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், மிகக் குறைந்த வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் நல்ல கிரெடிட் ஸ்கோர் (Credit score) வைத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன (அதாவது 750-800 க்கு மேல்). எனவே, உங்கள் கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருந்தால், வீட்டுக் கடன் போன்ற நீண்ட கால கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு, அதை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், கடனை திருப்பி செலுத்தும் வரை உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் எந்தவொரு கணிசமான சரிவும் ஆபத்து விளிம்பை அதிகரிக்கும். அதனால் உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவதில் முறையாக கவனம் செலுத்த வேண்டும் என்று பேங்க் பஜார் (Bank bazar)தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வங்கிகள் தரும் கடன்கள் மறு கொள்முதல் ஒப்பந்தத்தின் (ரெப்போ) விகிதத்திற்கு அளவுகோல் என்பதை ஆர்வமுள்ள வீட்டுபயன்பாட்டாளர்கள் மனதில் கொள்ள வேண்டும். எனவே, வங்கியின் முக்கிய கொள்கை விகிதத்தில் ஏதேனும் அதிகரிப்பு இருப்பின், அவை உங்களுக்கு பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தில் விரைவான மற்றும் விகிதாசார வட்டி அதிகரிப்புக்கு வழிவகுக்கும். ஆகவே நீங்கள் வீட்டுக் கடன் (House loan) பெற திட்டமிட்டால், தற்போது நாட்டில் மிகக் குறைந்த வட்டி விகிதங்களை வழங்கும் எஸ்பிஐ, எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, பி.என்.பி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட 20 வங்கிகளின் பட்டியலை இங்கு வழங்கியுள்ளோம்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
ஈஷா மஹாசிவராத்திரி: இந்தாண்டு ஆன்லைன் வாயிலாக கலந்துகொள்ளுங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சாப்பிடுங்கள்!