எதையும் நான் தேடிச் செல்வதில்லை. எதற்கு ஆசைப்படுகிறோமோ, எதை வாங்க வேண்டும் என விரும்புகிறோமோ அதை ஆன்லைனின் புக் செய்துவிட்டுச் சில நாட்கள் காத்திருந்தால் போதும். அது நம்மைத் தேடி நம் வீட்டிற்கு வரும். ஏனெனில் , இப்போது எல்லாமே ஆன்லைன்மயமாகிவிட்டது.
அந்த வகையில், அட்சயத் திரிதிப் பரிசாக, நீங்கள் தங்கத்தைக்கூட ஆன்லைனில் வாங்கலாம். இதற்கு உங்களுக்கு போனஸாகக் கேஷ் பேக்கும் கிடைக்கிறது.
அதிரடிச் சலுகை (Action offer)
போன் பே ஆப் மூலமாக இந்தச் சலுகையைப் பயன்படுத்தி நீங்கள் தங்கம் வாங்கினால் அட்டகாசமான ஆஃபர்களை பெறலாம்.
டிஜிட்டல் பரிவர்த்தனை செயலியான போன் பே (PhonePe) அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு மொபைல் ஆப் மூலமாக தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதற்கான சலுகையை அறிவித்துள்ளது. இந்த செயலி மூலம் பயனர்கள் 999 கேரட் தூய்மையான தங்கத்தை வாங்கலாம்.
வீட்டிற்கே டெலிவரி
போன் பே ஆப் மூலமாக இந்தச் சலுகையில் தங்கம் வாங்கினால் அதற்கு கட்டணம் எதுவும் இல்லை. இது தவிர, தங்க நாணயங்கள் அல்லது கட்டிகள் (Bar) வடிவில் தங்கத்தையும் வெள்ளியையும் நீங்கள் வீட்டிலேயே டெலிவரி வாங்கிக் கொள்ளலாம். போன் பே ஆப் மூலமாக இந்தச் சலுகையில் தங்கம் வாங்கினால் அதற்கு கட்டணம் எதுவும் இல்லை. இது தவிர, தங்க நாணயங்கள் அல்லது கட்டிகள் (Bar) வடிவில் தங்கத்தையும் வெள்ளியையும் நீங்கள் வீட்டிலேயே டெலிவரி பெற்றுக் கொள்ளலாம்.
ரூ.2,500 வரை கேஷ்பேக்
இந்த சிறப்பு சலுகை திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்கினால் ரூ.2,500 வரை கேஷ்பேக் பெறலாம். வெள்ளி நாணயங்கள் அல்லது கட்டிகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.250 வரை கேஷ்பேக் பெற முடியும். அட்சயத்திரிதியை வரை மட்டுமே இந்தச் சலுகை செல்லுபடியாகும். எனவே அதற்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் படிக்க...
ஜொலிக்கும் தங்கம்- தூய்மையான தங்கத்தை கண்டுபிடிப்பது எப்படி?
சுகருக்கு குட்பை சொல்ல தினமும் 50 கிராம் முருங்கை இலை- ஆய்வில் தகவல்!