5 மாநிலங்களில் தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில், டிஜிட்டல் வாக்காளர் அட்டையை அண்மையில் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது. இனி ஆதார் அட்டையை போலவே டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
சூடுபிடிக்கும் தேர்தல் களம்
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸ்சாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் ஆணையமும் முழுவீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதனிடையே, கடந்த 25ம் தேதி தேசிய வாக்களார் தினத்தன்று டிஜிட்டல் வாக்களார் அட்டையை (Digital Voter card) அறிமுகம் செய்தது.
டிஜிட்டல் வாக்காளர் அட்டை
இந்த டிஜிட்டல் வாக்காளர் அடையாள் அட்டையினை PFD பார்மேட்டில் பெற்றுக் கொள்ள முடியும். இதனை எடிட் செய்ய முடியாது. இந்த புதிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை புதிதாக பதிவு செய்யும் வாக்காளர்கள் மட்டுமே கடந்த வாரத்தில் பெற முடிந்தது. விரைவில் அனைத்து தரப்பு வாக்காளர்களும் இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டையை பெற முடியும்.
இ-வாக்காளர் அட்டைக்கு மொபைல் எண் கட்டாயம்
வாக்காளர் அடையாள அட்டையில் மொபைல் எண்ணை பதிவு செய்திருந்தவர்கள் மட்டுமே, e-Voter ID-க்கு பதிவு செய்யலாம். அப்படி அப்டேட் செய்யாதவர்கள் மொபைல் நம்பரை அப்டேட் செய்து, பின்னர் டிஜிட்டல் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் தங்களது செல்போன் நம்பரை பதிவிட்ட வாக்காளர்கள், பிப்ரவரி 1ம் தேதி முதல் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பெற முடியும்.
இ-வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?
இந்த டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை நீங்கள் https://voterportal.eci.gov.in/ என்ற தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பழைய கார்டு வைத்திருப்பவர்களும், டிஜிட்டல் முறையில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டைகளைப் டவுன்லோட் செய்வதற்கான வழிமுறைகள்...
-
voterportal.eci.gov.in-க்கு செல்லவும். தொடர்புடைய விவரங்களை உள்ளிட்டு ஒரு கணக்கை உருவாக்கவும்.
-
கணக்கை உருவாக்கியதும், உள்நுழைந்து “Download e-EPIC” என்று கூறும் மெனுவுக்குச் செல்லவும்.
-
உங்கள் EPIC எண் அல்லது படிவ குறிப்பு எண்ணை உள்ளிடவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும்.
-
இப்போது, “Download EPIC” என்பதைக் கிளிக் செய்க. இருப்பினும், அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண் வேறுபட்டால் கார்டைப் பதிவிறக்க உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) செயல்முறையை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
-
KYC மூலம் எண்ணைப் புதுப்பித்த பிறகு, நீங்கள் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையைப் பதிவிறக்கலாம்.
-
உங்கள் e-EPIC எண்ணை நீங்கள் இழந்திருந்தால், அதை voterportal.eci.gov.inல் சரிபார்க்கலாம்.
-
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை வாக்காளர் மொபைல் பயன்பாட்டிலிருந்தும் உருவாக்கலாம், அதை Google Play Store-லிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும் படிக்க...
10 மரக்கன்றுகளை நட்டால், புதிய பைக் வாங்க 25,000 தள்ளுபடி! அதிரடி சலுகை!