மியூச்சுவல் பண்டு முதலீடுகள் குறித்த விழிப்புணர்வை வாசகர்களிடம் ஏற்படுத்துவதற்காக, ‘ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் மியூச்சுவல் பண்டு’ நிறுவனத்துடன் இணைந்து, முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, ‘தினமலர் (Dinamalar) நடத்த உள்ளது. முதல் நிகழ்ச்சி, வரும், 27ம் தேதி அன்று, ‘வெபினார்’ வாயிலாக நடைபெற உள்ளது.
இலவசம்
மியூச்சுவல் பன்ட் தொடர்பான இந்த வெபினார் முற்றிலும் இலவசமான நிகழ்ச்சி. வரும் 27ம் தேதி காலை, 11 மணி முதல், மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மொத்தம், 10 பகுதிகளாக நடைபெற இருக்கின்றன. வரும், 27ம் தேதியன்று நடைபெற இருக்கும் முதல் நிகழ்ச்சியில், ‘மியூச்சுவல் பண்டில் முதலீடு (Mutual fund investment) செய்வது எப்படி? என்னென்ன நன்மைகள்? என்பது குறித்து விளக்கப்பட இருக்கிறது.
ஏற்கனவே மாணவர்களுக்காக, ‘ஜெயித்துக் காட்டுவோம், வழிகாட்டி, உங்களால் முடியும்’ என பல நிகழ்ச்சிகளை தனித்துவத்துடன், ‘தினமலர்’ நடத்தி வருவதை நாடே அறியும். அதன் தொடர்ச்சியாக, மியூச்சுவல் பண்டு முதலீடு குறித்த நிகழ்ச்சிகள் துவங்குகின்றன.
முதலீட்டு சூட்சுமங்கள்
மியூச்சுவல் பண்டு முதலீடுகள் குறித்து ஆரம்ப நிலையில் துவங்கி, அதன் அனைத்து சூட்சுமங்களையும் விளக்கி சொல்லும் வகையில், இந்த நிகழ்ச்சிகள் வரிசையாக நடைபெற இருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில், ‘ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் மியூச்சுவல் பண்டு (ICICI Prudential Mutual Fund)' நிறுவனம் சார்பாக, அதன் தெற்கு மண்டல தலைவர் எஸ்.ஹரீஷ் , மற்றும் பிரபல நிதி ஆலோசகர் வ.நாகப்பன் ஆகியோர் பங்கேற்று, மியூச்சுவல் பண்டு குறித்த அனைத்து விஷயங்களையும் வாசகர்களுக்கு விளக்க இருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியை, பத்திரிகையாளர் ஆர்.வெங்கடேஷ் நெறியாளராக இருந்து நடத்த இருக்கிறார். அத்துடன், வாசகர்களின் சந்தேகங்களையும் நிகழ்ச்சியின்போது நிபுணர்கள் தீர்த்துவைக்க இருக்கிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வாசகர்கள் மியூச்சுவல் பண்டு குறித்த தங்களின் அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம். இதற்காக, வாசகர்கள், www.dinamalar.com/webinar எனும் இணையதளத்திற்கு சென்று தங்கள் சந்தேகங்களை பதிவு செய்துகொள்ளலாம்.
முதலீடு
கஷ்டப்பட்டு சம்பாதித்தால் மட்டும் போதாது; அதை சேமிக்கவும் வேண்டும். சேமித்தால் மட்டும் போதாது; அதை முதலீடு (Investment) செய்ய வேண்டும். முதலீடு மட்டும் செய்தால் போதாது; அது பல மடங்காக பெருக வேண்டும். உங்கள் சேமிப்பை, முதலீடாக மாற்றி, அதை பல மடங்காக அதிகரிக்க உதவும் இந்த வாய்ப்பை, தவற விட்டு விடாதீர்கள். மியூச்சுவல் பண்டு முதலீடு குறித்து, ஆதியிலிருந்து அந்தம் வரை அறிந்து கொள்ளுங்கள்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வீட்டு சாமான்களை அசத்தலான விலையில் வாங்க, கடன் வழங்குகிறது வங்கிகள்!
ஐசிஐசிஐ வங்கி அசத்தல் அறிவிப்பு! ஆன்லைனில் உடனடி EMI வசதி!