பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 9 January, 2020 2:37 PM IST

காய் வகைகளில் அனைத்துத் தரப்பினரும் விரும்பி உண்ணும் மற்றும் அனைத்து நோயாளிகளும் உண்ணக்கூடிய காய், பீர்க்கங்காய் ஆகும். உள்ளூர் சந்தைகளில் அதிகம் விற்பனை செய்யப்படும் இக்காய் தற்போது மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாவதால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். குறைந்த செலவில் அதிக லாபம் தருவதால் விவசாயிகள் விரும்பி பயிர் செய்கின்றனர்.

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் பல்வேறு காய்கறிகள், பழங்கள் சாகுபடி செய்யப் பட்டு வருகின்றன. அங்கு நிலவும் தட்ப வெப்பநிலை பயிர் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பதால் வேளாண்மை  அதிக பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் குறுகிய கால பயிர்களை   விரும்பி பயிர் செய்கின்றனர். கொடி வகைகளான பாகல், புடலை, அவரை, பீர்க்கை ஆகியன குறைந்த நாட்களில் மகசூல் தருகிறது.

நடவு செய்த இரண்டு மாதங்களுக்குள்ளாகவே பலன் தர துவங்கும். நான்கு நாட்கள் இடைவெளியில் காய்கள் பறிக்கலாம். இவ்வாறாக தொடர்ந்து 80 நாட்கள் வரை மகசூல் கொடுக்கும். ஒரு ஏக்கருக்கு 1.50 கிலோ முதல் 2 கிலோ வரை விதை தேவைப்படும். மகசூலாக 8 டன் வரை கிடைக்கும். இதில் ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.50,000 முதல் ரூ. ஒரு லட்சம் வரை செலவாகும். சந்தையில் கிலோவிற்கு ரூ.30 முதல் ரூ.40 வரை கிடைப்பதால், ஏக்கருக்கு ரூ.2.5 லட்சதிற்கு மேல் வருவாய் கிடைப்பதாக தெரிவித்தனர். நடவு செய்த 40 நாட்களில், ஏக்கருக்கு குறைந்தது ரூ.1.5 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

English Summary: Huge Demand for Ridge Gourd: Farmers are exporting Malaysia and Singapore
Published on: 09 January 2020, 02:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now