செல்போன் மோகம் அதிலும் ஸ்மார்ட்போன் வைத்துக்கொண்டு, நாம் விரும்பும் விஷயத்தை, விரும்பும் நேரத்தில் பார்த்து மகிழ்வது என்பது தற்போது பலருக்கும் அன்றாட நிகழ்வாக மாறி விட்டது.
இளைஞர்களின் இலக்கு (Target of youth)
அதனால் ஸ்மார்ட்போன் வாங்குவது என்பதை, இளைஞர்கள் பலரும் இலக்காகக் கொண்டுள்ளனர். அதற்காக எதையும் செய்யத் துணிந்துவிடுகிறார்கள் என்பது கொடுமையின் உச்சக்கட்டம் தான்.
அப்படியொரு சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது.
திருமண வாழ்க்கை (marriage life)
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், அதே மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. இதன் பின்னர், கணவன் - மனைவி இருவரும், ராஜஸ்தான் மாநிலத்திற்கு செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.
ஸ்மார்ட்போன் மோகம் (Smartphone craze)
அப்போது, அந்த 17 வயது சிறுவன், ராஜஸ்தான் மாநிலத்தின் பாரன் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது முதியவரிடம் தனது மனைவியை 1.8 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளான். பின்னர், அந்தப் பணத்தின் ஒருபகுதியைக் கொண்டு, விரும்பியதை வாங்கிச் சாப்பிட்ட அந்தச் சிறுவன், தனக்கென்று ஒரு ஸ்மார்ட்போனும் வாங்கியிருக்கிறான்.
இதைத் தொடர்ந்து, சொந்த ஊருக்குத் திரும்பிய அந்த சிறுவன், தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாக நாடகமாடினான். இதனை நம்பாத பெண்ணின் குடும்பத்தார், இது தொடர்பாக ஒடிசா போலீசாரிடம் புகார் அளித்தனர்.
விசாரணையில் அம்பலம் (Exposed at trial)
போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், தன் மனைவியை விற்று ஸ்மார்ட்போன் வாங்கியதை ஒப்புக்கொண்டுள்ளான் சிறுவன்.
நீண்டப் போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணை ஒடிசா காவல் துறையினர் மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், தற்போது சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
மேலும் படிக்க...