மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 September, 2021 10:15 AM IST
Credit : Samayam Tamil

காப்பீடு எடுக்க வசதி இல்லாத ஏழை எளிய மக்களின் வசதிக்காகவே இலசமாகக் காப்பீடு அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன் பெயர் ஜன் தன் யோஜனா வங்கிக்கணக்குத் திட்டம்.

காப்பீடு (Insurance)

வசதி படைத்தவர்கள், தங்கள் வாழ்க்கைக்குப் பிறகு, தங்கள் குடும்பத்தினர் நிதிச்சுமைக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காகவே, ஆயுள் காப்பீடு எடுத்துக் கொள்வது வழக்கம்.எதிர்காலத்தைப் பற்றியத் திட்டமிடலைக் கைகொள்ளும் அனைவரும் இதனைச் செய்வார்கள். 

ஏழைகளுக்கு (To the poor)

ஆனால், அன்றாட வருமானத்தைக் கொண்டுக் காலத்தை ஓட்டுபவர்கள், எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கவே மாட்டார்கள். அவர்களது நிதிநிலைமை, காப்பீடு என்பதற்கெல்லாம் ஒருபோதும் இடம் கொடுக்காது.

ஜன் தன் வங்கிக்கணக்கு

இத்தகையோரின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்குத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
அதேபோல, நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் நரேந்திர மோடி அரசால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கணக்கு இல்லாத சுமார் 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கிக் கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதில் விபத்துக் காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளோடு, மத்திய, மாநில அரசின் நிதியுதவிகள் இந்த ஜன் தன் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகளும் வழங்கப்படுகின்றன.  ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்கில் இத்தகைய மேலும் பல நன்மைகள் உள்ளன.

நன்மைகள் (Benefits)

  • இதில் விபத்துக் காப்பீடாக ரூ.2 லட்சம் கிடைக்கிறது.

  • கணக்கு தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு ஓவர் டிராஃப்ட் வசதியின் கீழ் வங்கிக் கணக்கில் பேலன்ஸ் இல்லாமலேயே பணம் எடுக்க முடியும்.

  • ஆயுள் காப்பீடாக ரூ.30,000 வழங்கப்படுகிறது.

  • டெபாசிட் செய்யும் தொகைக்கு வட்டி கிடைக்கிறது.

  • இலவச மொபைல் பேங்கிங் வசதியும் உள்ளது.

  • ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூபே டெபிட் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

கணக்குத் தொடங்க (Start account)

ஜன் தன் கணக்கு மூலமாக காப்பீடு, பென்சன் போன்ற நிதியுதவிகளைப் பெறுவது எளிதாக எந்தவொரு வங்கியிலும், தபால் நிலையத்திலும் ஜன் தன் கணக்கை நீங்கள் திறக்க முடியும்.

பெயர், மொபைல் நம்பர், வங்கிக் கிளையின் பெயர், பயனாளர் முகவரி, நாமினி பெயர், தொழில், ஆண்டு வருமானம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவிட வேண்டியிருக்கும்.

ஆதார் கார்டு, பான் கார்டு, 100 நாள் வேலை அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.எனவே உடனே ஜன்தன் வங்கிக்கணக்குத் தொடங்கி 2 லட்சம் ரூபாய்க்கான இலவசக் காப்பீடு பெறங்கள்.

மேலும் படிக்க...

ஒரு மணி நேரத்தில் ரூ.1 லட்சம் -பிஎஃப் கணக்கிலிருந்து எடுக்கலாம்!

தினமும் ரூ.74 சேமிக்கும் அருமையானத்திட்டம்

English Summary: If you do this, you will get Rs. 2 lakh insurance for free!
Published on: 17 September 2021, 10:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now