பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 13 April, 2021 8:29 AM IST
Credit : The Hindu

தினமும் வெறும் 95 ரூபாய் முதலீடு செய்தால், அந்த தொகை முதிர்வு அடையும்போது நமக்கு 14 லட்சம் ரூபாய் அளிக்கிறது இந்த அஞ்சலகத் திட்டம்.

சேமிப்பு என்பது நம்முடைய எதிர்காலத்தை வளமாக்க மட்டுமல்ல, இக்கட்டான சூழ்நிலைகளில் நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் உதவும். அப்படி சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக இப்போதே சேமிக்க விரும்புபவராக நீங்கள்?

ரூ.95க்கு ரூ.14 லட்சம்

அப்படியானால் இந்தத்திட்டம் உங்களுக்கு வியப்பூட்டும். வெறும் 95 ரூபாய் முதலீடு செய்து 14 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட முடியுமென சொன்னால் நம்ப முடிகிறதா? அதுவும் பாதுகாப்பான முதலீடு என்றால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

தபால் அலுவலக திட்டங்கள் (Post Office Schemes)

 இந்திய தபால் துறை அஞ்சல் சேவைத்தவிர, சேமிப்புத் திட்டங்கள், வைப்புத் தொகை, முதலீட்டுத் திட்டங்கள் உள்பட பல்வேறு சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது.

என்பதாலும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

கிராம சுமங்கல் திட்டம் (Village Burden Project)

தபால் அலுவலகத்தில் கிராம சுமங்கல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (Post Office Gram Sumangal Rural Postal Life Insurance Scheme) வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் மக்களுக்கு பணமும், காப்பீடும் கிடைக்கிறது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்கள், பெண் தொழிலாளர்கள் பயன்பெறுவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ரூ.95  பிரீமியம் (Rs.95 premium)

25 வயதில் இத்திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். 20 ஆண்டு கால பாலிசிக்கு 7 லட்சம் ரூபாய் உறுதியளிக்கப்படும்.
இதற்கு மாதம் 2853 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதாவது, தினசரி 95 ரூபாய் சேமித்தால் மாதம் 2953 ரூபாய் முதலீடு செய்யலாம்.

பல வகைப் பிரீமியம் (Many types of premium)

காலாண்டு பிரீமியம் என்றால் 8,449ரூபாயும், அரையாண்டு பிரீமியமாக16,715ரூபாயும், ஆண்டு பிரீமியம் என்றால் 32,735ரூபாயும் செலுத்த வேண்டும்.

முதிர்வுத்தொகை (Maturity)

பாலிசியின் 8ஆவது, 12ஆவது, 16ஆவது ஆண்டுகளில் 1.4 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். 20ஆவது ஆண்டில் 2.8 லட்சம் ரூபாய் உறுதித் தொகையாகக் கிடைக்கும். உறுதி தொகையில் ஆண்டுக்கு ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 48 ரூபாய் என போனஸ் தொகை கணக்கிடப்பட்டு 3,3600 ரூபாய் கிடைக்கும்.

ரூ.14லட்சம் (Rs.14 lakh)

எனவே, 20 ஆண்டுகளுக்கு ரூ.6.72 லட்சம் போனஸ். 20 ஆண்டு நிறைவில் ஒட்டுமொத்தமாக 13.72 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதில் 4.2 லட்சம் ரூபாய் Money back ஆக கிடைக்கும். மெச்சூரிட்டியின்போது 9.52 லட்சம் ரூபாய் உடனடியாக கிடைக்கும்.

மேலும் படிக்க...

உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க, பெஸ்ட் முதலீடு எதுன்னு பாருங்க!

SBI-யின் அதிரடி ஆஃபர்! பிரிமியமே இல்லாமல் ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ்!

மத்திய அரசின் முத்ரா கடன் திட்டம்: 6 ஆண்டுகளில் 15 இலட்சம் கோடி கடன்!

English Summary: If you invest just Rs 95 - Rs. 14 lakh postal savings scheme!
Published on: 13 April 2021, 08:25 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now