IFAJ சார்பில் கனடாவில் நடைப்பெற்ற மாஸ்டர் கிளாஸ் மற்றும் யங் லீடர்ஸ் ப்ரிலிமினரி ப்ரோக்ராம் 2023-ல் (Young Leaders Preliminary Program) உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வேளாண் துறை சார்ந்து இயங்குபவர்கள் பங்கேற்றனர்.
ஜூன் 24, 2023 அன்று தொடங்கிய IFAJ மாஸ்டர் கிளாஸ் மற்றும் யங் லீடர்ஸ் ப்ரிலிமினரி புரோகிராம் ஜூலை 3, 2023 வரை தொடர்ந்து நடைப்பெறுகிறது. இந்த நிகழ்வில் வொர்க்ஷாப் டே, டூர் டே மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் ஆகியவையும் அடங்கும்.
IFAJ-Alltech Young Leaders in Agricultural Journalism விருது என்பது IFAJ-ல் பங்கு வகிக்கும் நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களின் தொழில்முறை நிபுணத்துவம் மற்றும் தலைமைத்துவ திறனைக் கௌரவிக்கும் ஒரு மதிப்புமிக்க திட்டமாக கருதப்படுகிறது. மேலும், இது IFAJ-ஆனது வேளாண் ஆர்வலர்கள் தீவிரமாக ஈடுபடுவதற்கான ஒரு தளமாகவும் செயல்படுகிறது, அவர்களுக்கு பயிற்சி, அனுபவம் மற்றும் நெட்வொர்க்கிங் ஆகியவற்றிற்கான விலைமதிப்பற்ற வாய்ப்புகளையும் இத்தளம் வழங்குகிறது.
இந்த மதிப்பிற்குரிய விருதை வென்றவர்கள் முறையான வகுப்பறை பயிற்சி அமர்வுகள் மற்றும் நடைமுறை களப்பணிகளை உள்ளடக்கிய பிரத்யேக துவக்க முகாமில் பங்கேற்பார்கள். இந்த விரிவான திட்டத்தின் முதன்மை நோக்கம், தலைமை, நெட்வொர்க்கிங் மற்றும் அறிக்கையிடல் ஆகியவற்றில் இளம் தலைவர்களின் திறனை மேலும் வளர்ப்பதாகும். விருது வென்றவர்கள் IFAJ இணையதளத்தில் அவர்களின் கற்றல் பயணம் முழுவதையும் பதிவு செய்திட வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டுள்ளது.
IFAJ மற்றும் Alltech ஆகியவை விவசாயப் பத்திரிகைத் துறையில் அடுத்த தலைமுறை நிபுணர்களை ஆதரிப்பதற்கும், உருவாக்கவும் தங்களை அர்ப்பணித்து உள்ளது. IFAJ உறுப்பினர் சங்கங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமும், நம்பிக்கைக்குரிய இளம் பத்திரிகையாளர்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதன் மூலமும், விவசாய இதழியல் மற்றும் தகவல்தொடர்புகளின் உலகளாவிய முன்னேற்றத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதே இலக்காக கொண்டு செயல்படுகிறது.
இந்த ஆண்டு, IFAJ மாஸ்டர் கிளாஸ் மற்றும் இளம் தலைவர்களின் ஆரம்ப நிகழ்ச்சிக்கான அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தவர்களின் சில முக்கிய பெயர்கள் விவரம் பின்வருமாறு-
அடல்பெர்டோ ரோஸ்ஸி (பொதுச்செயலாளர் IFAJ), ஸ்டீவ் வெர்ப்லோ (துணைத் தலைவர் IFAJ), லாரிசா கப்ரியோட்டி (ஊடக தொடர்பு ஆலோசகர்) மற்றும் பிரெட்டன் டேவி (தொடர்புத் தலைவர்) ஜார்ஜியா சிரோம்போ (மலாவி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜர்னல் இஸம் மலாவி), மெழுகனல் செரியன் டொமினிக் (கிரிஷி ஜாக்ரன் இந்தியா), உலன் எஷ்மடோவ் (ஃப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட் கிர்கிஸ்தான்), முஸ்தபா கமாரா (சோலிடரிடாட் மேற்கு ஆப்பிரிக்கா சியரா லியோன்) மற்றும் இன்னும் சிலர்.
சர்வதேச விவசாயப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (IFAJ) மாநாடானது AB, 32 அவென்யூ வடகிழக்கில் அமைந்துள்ள ஷெரட்டன் கவாலியர் கால்கரி ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வானது Corteva மற்றும் Alltech மூலம் நிதியுதவி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
pic courtesy: agriculture world fb
மேலும் காண்க:
ரேஷன் கார்டுக்கு 2 பழ மரக்கன்று- சரியா வளர்க்கலனா சிக்கல் வேற..