Blogs

Thursday, 26 March 2020 05:56 PM , by: Anitha Jegadeesan

கரோனா குறித்த பீதி மற்றும் 144 தடை உத்தரவு போன்ற காரணங்களினால் சிறு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளனர் எனலாம். காய்கறிகள், பழங்கள், கீரைகள் விற்பவர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் இவற்றை விற்பனை செய்ய இயலாது அதனை கால்நடைகளுக்கு தீவனமாக வழங்குகின்றனர்.

தமிழகத்தில் பங்குனி, சித்திரை மாதங்களில் முருங்கைக்காய் சீசன் என்பதால், விளைச்சல் அதிகரித்துள்ளது. இருந்த போதும் அரசின் தடை உத்தரவால் முருங்கை விலையும் சரிந்து, விற்பனையும் செய்ய இயலாமல் நட்டத்தை சந்தித்து வருகின்றனர் . நன்கு விளைந்த காய்கள் மற்றும் கீரைகளை பறிக்காமல் இருக்கவும் முடியாது, மார்க்கெட்டிற்கு சென்று விற்கவும் முடியாமல் வீணாவதை தவிர்க்க ஒரு சில விவசாயிகள் காய்களை பறித்து கால்நடைகளுக்கு உணவாகக் கொடுத்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தடை உத்தரவு, கரோனா தொற்று போன்ற காரணங்களினால் வெளியில் செல்லவே அச்சமாக உள்ளது. மேலும் பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து  வருவதால் அவைகளுக்கு போதிய பசுந்தீவனம் வழங்க இயலாத நிலை உருவாகி உள்ளது.  பசுந்தீவன பற்றாக்குறையை போக்கவும், வீணாகும் முருங்கையை ஆடு, மாடுகளுக்கு தீவனமாக கொடுப்பதாக தெரிவித்தனர்.   

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)