மஞ்சள் மாநகரம் என்று அழைக்கப்படும் ஈரோடு மாவட்டத்தில் விளையும் ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு விளையும் மஞ்சள், உலகப்புகழ் பெற்றது என்பதால் இங்கிருந்து நாடு முழுவதும், அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் படுகிது. ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில் மஞ்சள் விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.
வார நாட்களில் இங்கு மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. தற்போது நாடு முழுவதும் கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்களுக்கு விடுமுறை என்பதால், மஞ்சள் வணிக வளாகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மஞ்சள் வர்த்தக நிலையங்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் அனைவரும் இணைந்து, வரும் 23ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை மஞ்சள் வர்த்தகத்திற்கு விடுமுறை என அறிவித்துள்ளனர். வரும் ஏப்ரல் 8ம் தேதி (புதன்கிழமை) முதல் மஞ்சள் வர்த்தகம் வழக்கம்போல செயல்படும் என தெரிவித்துள்ளார்.