Blogs

Friday, 14 February 2020 11:47 AM , by: Anitha Jegadeesan

ஓரிரு மாதங்களில் கோடைக்காலம் துவங்கவுள்ள நிலையில் வெயிலின் தாக்கத்தை தணிக்க வல்ல,  தர்பூசணியினை சாகுபடி செய்ய துவங்கி உள்ளனர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள். ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை சாகுபடிக்கு உகந்த காலங்கள் என்பதால் பெரும்பாலான விவசாயிகள் தனிப்பயிராகவும்,  ஊடுபயிராகவும் தர்பூசணியை பயிரிடுகின்றனர். விதைத்த 45 நாட்களில் பூக்கள் பூத்து பிஞ்சுகள் உருவாகும். 65 முதல் 70 நாட்களில் காய்கள் முற்றி அறுவடைக்குத் தயாராகி விடும்.

விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக்கர் தர்பூசணி பயிரிட ரூ.15 முதல் 20 ஆயிரம் வரை செலவாகிறது. கோடையில் அமோக விற்பனை இருப்பதால் பழங்கள் ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படும். தற்போது அவர்களுடைய எதிர்பார்ப்பு அறுவடைக்கு முன், மழை பெய்யாமல் இருந்தால், நிச்சயம் லாபம் கிடைக்கும் என்கிறார்கள்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)