இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சார்பில் ‘எல்ஐசி ஜீவன் ஆசாத்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து எல்ஐசி வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எல்ஐசி ‘ஜீவன் ஆசாத் திட்டம்’ பங்குச்சந்தையில் சேராத, தனி நபர், சேமிப்பு ஆயுள்காப்பீடு திட்டமாகும். இதன்மூலம் சேமிப்பும், பாதுகாப்பும் கிடைக்கும்.
எல்ஐசி ஜீவன் ஆசாத் (LIC Jeeven Azad)
பாலிசிகாலத்தின் போது ஆயுள்காப்பீட்டாளர் துரதிருஷ்டவசமாக இறந்தால் அவரது குடும்பத்துக்கு இத்திட்டம் மூலம் நிதி ஆதரவு கிடைக்கும். மேலும் இதிலிருந்து கடன் பெறவும் முடியும். பாலிசி முதிர்வுத் தேதியில் உறுதிசெய்யப்பட்ட உத்தரவாதமான பணம் பாலிசிதாரருக்கு கிடைக்கும்.
எல்ஐசி ஜீவன் ஆசாத் திட்டத்தில் குறைந்தபட்ச அடிப்படை உத்தரவாத தொகை ரூ.2 லட்சமாகவும், அதிகபட்ச அடிப்படை உத்தரவாத தொகை ரூ.5 லட்சமாகவும் உள்ளது. இந்த பாலிசியை 15 முதல் 20 ஆண்டுக் காலத்துக்கு எடுக்க முடியும். மொத்த பாலிசி காலத்தில் 8 ஆண்டுகள் மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதும். இதில் 90 நாள் குழந்தை முதல், 50 வயது பெரியவர் வரை சேர முடியும்.
பிரீமியத்தை ஆண்டு, அரையாண்டு, காலாண்டு, மாத இடைவெளியில் செலுத்தலாம். முகவர்கள் மூலமும், ஆன்லைனிலும், எல்ஐசி அலுவலகங்களிலும் இந்த பாலிசியில் சேர முடியும். மேலும் விவரங்களுக்கு www.licindia.in என்ற இணையதளத்தைக் காணலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
ஒவ்வொரு மாதமும் புதிய மின் கட்டணம்? விரைவில் அமலுக்கு வரும்!
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி: இனி இந்தக் கவலையே இல்லை!