Blogs

Thursday, 25 June 2020 12:10 PM , by: KJ Staff

2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை ( income-tax returns) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு ஜூலை 31, 2020 வரை நீட்டித்துள்ளது. மேலும் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கவும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை கால அவகாசம் அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அனைத்து தொழில் துறையும் முற்றிலுமாக முடங்கி இருக்கிறது. பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது, நாட்டு மக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் வருவாய் குறைந்து பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு வருமான வரி, ஜிஎஸ்டி, மின் கட்டணம், வாகன வரி மற்றும் இதர வரிகளைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்தது.

இதன் படி, கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் அரசு வெளியிட்ட அறிவிப்பில், 2018-19-ம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரி ரிட்டன்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 30-ம் தேதிக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல, ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதியும் ஜூன் 30-ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டது. வாகன வரி செலுத்தும் கால அவகாசத்தையும் ஜூன் 30 வரை நீட்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போதும், கொரோனா பாதிப்புகள் நீடிக்கும் சூழலில் வரி செலுத்துவோருக்கு ஏதுவாக வருமான வரி தாக்கல் செய்வதற்கும் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கும் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2018-19ஆம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வரும் ஜூலை 31ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
2019-20ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, 2020 ஜூலை 31 மற்றும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டிய வருமான வரியினை, 2020 நவம்பர் 30 வரை தாக்கல் செய்யலாம்.
 
மேலும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரையில் நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

அரசு ஊழியர்கள் - ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை!!

மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து - தமிழக முதல்வர் அறிவிப்பு 


வென்டிலேட்டர்கள் தயாரிக்க பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.2000 கோடி ஒதுக்கீடு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)