இந்திய தபால் (India Post) நிறுவனமானது 2020 ஆம் ஆண்டிற்கான பணி நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2020 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.
விண்ணப்பிக்க
இந்திய தபால் துறையில் நாடு முழுவதும் மொத்தம் 4269 காலியிடங்கள் உள்ளன. குறிப்பாக பெல்காம், பெல்லாரி, பிதர், தார்வாட், குல்பர்கா, பெங்களூர், ரைச்சூர், ஹாசன், சித்ரதுர்கா, ஹவேரி, சிக்மகளூர், கடக், கோடகு ஆகிய பகுதிகளில் காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://indiapost.gov.in என்ற இந்திய தபாலின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.
01. இந்தியா தபால் நிறுவனத்தில் கர்நாடாக தபால் வட்ட ஆட்சேர்ப்பு
தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 20.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
நிறுவனம் - இந்திய தபால் கர்நாடகா வட்டம்
பணி - கிராம தபால் அலுவலர்
கல்வி தகுதி - 10 ஆம் வகுப்பு
வேலைக்கான இடம் - பெல்காம், பெல்லாரி, பிதர், தார்வாட், குல்பர்கா, பெங்களூர், ரைச்சூர், ஹாசன், சித்ரதுர்கா, ஹவேரி, சிக்மகளூர், கடாக், கோடகு
மொத்த காலியிடங்கள் - 2443
விண்ணப்பிக்க இறுதி தேதி - 20.01.2021
02.இந்தியா தபால் நிறுவனத்தில் குஜராத் அஞ்சல் வட்ட ஆட்சேர்ப்பு
2020 ஆம் ஆண்டிற்கான கிராம தபால் அலுவலர் (Rural Post Servent) பணிக்கான காலியிடங்கள்
விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 20.01.2021
நிறுவனம் இந்திய தபால் குஜராத் அஞ்சல் வட்டம்
பணி கிராம தபால் அலுவலர்
கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு
வேலைக்கான இடம்:ஆனந்த், பருச், பாவ்நகர், காந்திநகர், ஜாம்நகர், போர்பந்தர், ராஜ்கோட், சூரத், வல்சாத்-வாபி, அகமதாபாத், வதோதரா, பனஸ்கந்தா, ஜுனகத், சபர்கந்தா, பஞ்சமஹால், சுரேந்திரநகர், அம்ரேலி, பதான், நவ்சரி
மொத்த காலியிடங்கள் 1826
விண்ணப்பிக்க இறுதி தேதி 20.01.2021
Read More
ஆன்லைனில் டிஜிட்டல் அக்கௌன்ட்! SBI வங்கியின் புதிய திட்டம்!