பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆண்டுதோறும் ஊழியர்களின் பிஎஃப் கணக்குகளின் வட்டி விகிதத்தை உயர்த்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வட்டி வீதத்தை 8.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வட்டி விகிதம் என கூறப்படுகிறது.
பிஎஃப் வட்டி (PF Interest)
பிஎஃப் கணக்கில் 10 லட்ச ரூபாய் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு 81 ஆயிரம் ரூபாயாகவும், 7 லட்சம் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு 56 ஆயிரத்து 700 ரூபாயாகவும், 5 லட்சம் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு 40 ஆயிரத்து 500 ரூபாயாகவும், 1 லட்சம் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு 8 ஆயிரத்து 100 ரூபாயாகவும் வட்டி வழங்கப்படுகிறது.
இந்லையில் கணக்குதாரர்கள் பதிவு செய்த மொபைலில் இருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்த உடன் அவர்களுக்கு எஸ்எம்எஸ் விவரங்கள் அனுப்பப்படுகிறது. ஆனால் இந்த வசதியை பெற கணக்குதாரர்கள் பான் மற்றும் ஆதார் போன்ற விவரங்களை இணைத்திருக்க வேண்டும்.
மேலும் ஊழியர்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணிற்கு EPFOHO செய்தி அனுப்பப்படும்.பிறகு, எஸ்எம்எஸ் மூலமாக ஊழியர்களின் கணக்கு குறித்த விவரங்கள் அனுப்பப்படும்.
இது மராத்தி, தமிழ், பெங்காலி, மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி ஆகிய மொழிகளில் உள்ளது. மேலும் ஊழியர்கள் தங்களது போனில் உமாங் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமாகவும், epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க
பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: 800 காலிப்பணியிடங்கள்!